நாவில் எச்சி ஊறும் சுவையான பிரட் வெஜ் உப்புமா செய்வது எப்படி ?
உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை அல்லது மாலை நேர டிபனாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பல விதமான டிபன்கள் இருந்தாலும் உப்புமாவிற்க்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக ர
உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை அல்லது மாலை நேர டிபனாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பல விதமான டிபன்கள் இருந்தாலும் உப்புமாவிற்க்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக ரவை உப்புமா, சேமியா உப்புமா, இட்லி உப்புமா, மற்றும் அவுல் உப்புமா மிகவும் பிரபலமானவை.
அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அட்டகாசமான பிரட் உப்புமா. இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பிரட் உப்புமா செய்து கொடுங்கள். இந்த பிரட் உப்புமாவிற்கு எந்த வகையான பிரட்டையும் பயன்படுத்தலாம்.
மேலும் இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது. அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் போது, காலை உணவாக இந்த ரெசிபியை செய்யலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ஒரு சிம்பிளான ரெசிபி என்றே கூறலாம். இதை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் பசிக்கும் போது செய்து சாப்பிடலாம். இந்த பிரட் உப்புமா செய்வதற்கு பிரஷ்ஷான பிரட்களைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். பிரட், பட்டர், ஜாம் என்று சாப்பிட்டு அலுத்து போய் விட்டால், சுலபமான இந்த உப்புமாவை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!