நாவில் எச்சி ஊறும் சுவையான பிரட் வெஜ் உப்புமா செய்வது எப்படி ?

- Advertisement -

உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை அல்லது மாலை நேர டிபனாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பல விதமான டிபன்கள் இருந்தாலும் உப்புமாவிற்க்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக ரவை உப்புமா, சேமியா உப்புமா, இட்லி உப்புமா, மற்றும் அவுல் உப்புமா மிகவும் பிரபலமானவை.

-விளம்பரம்-

அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அட்டகாசமான பிரட் உப்புமா. இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பிரட் உப்புமா செய்து கொடுங்கள். இந்த பிரட் உப்புமாவிற்கு எந்த வகையான பிரட்டையும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

மேலும் இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது. அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் போது, காலை உணவாக இந்த ரெசிபியை செய்யலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ஒரு சிம்பிளான ரெசிபி என்றே கூறலாம். இதை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் பசிக்கும் போது செய்து சாப்பிடலாம். இந்த பிரட் உப்புமா செய்வதற்கு பிரஷ்ஷான பிரட்களைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். பிரட், பட்டர், ஜாம் என்று சாப்பிட்டு அலுத்து போய் விட்டால், சுலபமான இந்த உப்புமாவை செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

Print
No ratings yet

பிரட் வெஜ் உப்புமா | Bread Veg Upma Recipe In Tamil

உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை அல்லது மாலை நேர டிபனாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பல விதமான டிபன்கள் இருந்தாலும் உப்புமாவிற்க்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக ரவை உப்புமா, சேமியா உப்புமா, இட்லி உப்புமா, மற்றும் அவுல் உப்புமா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அட்டகாசமான பிரட் உப்புமா. இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பிரட் உப்புமா செய்து கொடுங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Bread Veg Upma
Yield: 3 People
Calories: 120kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 துண்டுகள் பிரட்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 குடை மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க :

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பில்லை

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, குடைமிளகாய்‌ ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிரட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு தக்காளி, குடை மிளகாய், இஞ்சி, சேர்த்து வதக்கவும்.
  • பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போக வதக்கவும். தண்ணீர் சுண்டியதும் பிரட் துண்டுகளை சேர்த்து உடையாமல் கலந்து, இரண்டு நிமிடங்கள் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் பிரட் மேல் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான, வித்தியாசமான பிரட் உப்புமா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 120kcal | Carbohydrates: 1.9g | Protein: 5g | Fat: 3g | Sodium: 97mg | Potassium: 70mg | Fiber: 3g | Vitamin C: 10mg | Calcium: 6mg | Iron: 4mg

இதனையும் படியுங்கள் : பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!