ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

- Advertisement -

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு மாவு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்!

-விளம்பரம்-

இத்தகைய பாரம்பரிய மிக்க கம்பு ,கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் சப்பாத்தியை செய்வதும் ரொம்ப சுலபம் தான். சுவையான ஹை ஃபைபர் சப்பாத்தி எப்படி சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது.

- Advertisement -

நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி குறைவா இருக்குமா? என்று நினைக்காதீங்க . இதோட ருசி அருமையாக இருக்கும்.  வாங்க ஹை ஃபைபர் சப்பாத்தி ரெசிபியை பார்ப்போம்.

Print
No ratings yet

சிறு தானிய சப்பாத்தி | Millet Chappathi Recipe In Tamil

பாரம்பரிய மிக்க கம்பு ,கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் சப்பாத்தியை செய்வதும் ரொம்ப சுலபம்தான். சுவையான ஹை ஃபைபர் சப்பாத்தி எப்படி சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம்இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான்இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில்பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில்,ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி குறைவா இருக்குமா? என்றுநினைக்காதீங்க . இதோட ருசி அருமையாக இருக்கும். வாங்க ஹை ஃபைபர் சப்பாத்தி ரெசிபியை பார்ப்போம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Millet Chappathi
Yield: 4
Calories: 0.285kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் சோயா மாவு
  • 1/2 கப் கம்பு மாவு
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • உப்பு சுவைக்கேற்ப

செய்முறை

  • வாணலியை சூடக்கி வெந்தயத்தை போட்டு சிறிதளவு சிவக்க வறுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
  • மிக்ஸியில் முதலில் வெந்தயத்தை பொடித்துக் கொள்ளவும். அதனுடன் மற்ற மாவுகளையும் போட்டு இரண்டு மூன்று சுற்று அரைக்கவும்.
  • மாவு கலவையை மிக்ஸியிலிருந்து எடுத்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு கோதுமை மாவு தூவி சப்பாத்தியாக தேய்க்கவும். சிறிது எண்ணெய் சேர்த்து சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும்.
  • சன்னா மசாலா, குருமாவுடன் பரிமாறலாம்.

செய்முறை குறிப்புகள்

இது நாம் எப்போதும் செய்யும் சப்பாத்தி போல் வட்டமாக தேய்க்க வராது. விரைவில் வெந்துவிடும். வெந்தயம் கசப்பு தெரியா மணம் மட்டும் இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

Nutrition

Serving: 1g | Calories: 0.285kcal | Carbohydrates: 35.6g | Protein: 12.2g | Fat: 10.4g | Sugar: 3.8g