Advertisement
சைவம்

கத்திரிக்காயில் சாப்ஸ் இப்படி கூட செய்யலாமா? சுவையில் சிக்கன் வறுவல் தோத்து போகும் ட்ரை பன்னி பாருங்க!

Advertisement

கத்திரிக்காயை வைத்து முற்றிலும் புதுவிதமான ஒரு சைட் டிஷ் இது. இந்த கத்திரிக்காய் சாப்ஸ் செய்து வைத்துக் கொண்டால், ரசம் சாதம், தயிர் சாதம் இவைகளை சூப்பராக சாப்பிடலாம். சிம்பிளாக ஒரு லஞ்ச் மெனு செய்யும் போது, இதை ட்ரை பண்ணி பாருங்க. வெரைட்டி ரைஸ்க்கு லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்கவும் இந்த பிரை ரெசிபி சூப்பரா இருக்கும். இது புலாவ் பிரியாணகும் அருமையான இணை உணவாக இருக்கும் கத்திரிக்காய் சாப்சா அல்லது கறி சாப்ஸ் என்ற டவுட் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தோன்றும். அத்தனை வாசம் நிறைந்த ரெசிபி இது.

பெரும்பாலும் கத்திரிக்காயை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது உடம்புக்கு கொஞ்சம் ஆரோக்கியம் தரக்கூடிய காய் ,ஒதுக்கி வைக்க வேண்டாம். வெரைட்டி ரைஸுக்கு சைடிஷ் ஆக, கத்திரிக்காய்களை இப்படி கத்திரிக்காய் சாப்ஸ் கொடுத்து பாருங்கள். கத்திரிக்காயை பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட, இதை விரும்பி விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். ரொம்ப ரொம்ப ஈஸியா கத்திரிக்காய் சாப்ஸ்எப்படி செய்வது. பதிவை தொடர்ந்து படியுங்கள்.

Advertisement

கத்திரிக்காய் சாப்ஸ் | Brinjal Chops Recipe In Tamil

Advertisement
Print Recipe
பெரும்பாலும் கத்திரிக்காயை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள்.ஆனால் இது உடம்புக்கு கொஞ்சம் ஆரோக்கியம் தரக்கூடிய காய் ,ஒதுக்கி வைக்க
Advertisement
வேண்டாம்.வெரைட்டி ரைஸுக்கு சைடிஷ் ஆக, கத்திரிக்காய்களை இப்படி கத்திரிக்காய் சாப்ஸ் கொடுத்துபாருங்கள். கத்திரிக்காயை பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட, இதை விரும்பி விரும்பிசாப்பிட்டு விடுவார்கள். ரொம்ப ரொம்ப ஈஸியா கத்திரிக்காய் சாப்ஸ் எப்படி செய்வது. பதிவைதொடர்ந்து படியுங்கள்.
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Brinjal Chops
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 3
Calories 60

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கத்தரிக்காய்
  • 1 ஸ்பூன் கடலை மாவு
  • 1/2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 ஸ்பூன் மிளகு அரைக்க
  • 1/2 ஸ்பூன் சோம்பு அரைக்க
  • 1 பட்டை அரைக்க
  • 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது

Instructions

  • கத்திரிக்காயை வட்ட வட்டமாக , கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள்.
  • கத்திரிக்காயை மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
  • அரைத்த மசாலா,கார்ன்ஃப்ளார், கடலைமாவு, உப்பு சேர்த்துப் பிசறி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
  • பிரமாதமாக இருக்கும் இந்த கத்திரிக்காய் சாப்ஸ்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 37g | Protein: 19g | Fat: 2g | Cholesterol: 2mg | Sodium: 10mg | Potassium: 83mg | Fiber: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

7 நிமிடங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

21 நிமிடங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

1 மணி நேரம் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

5 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

14 மணி நேரங்கள் ago