கத்திரிக்காயை வைத்து முற்றிலும் புதுவிதமான ஒரு சைட் டிஷ் இது. இந்த கத்திரிக்காய் சாப்ஸ் செய்து வைத்துக் கொண்டால், ரசம் சாதம், தயிர் சாதம் இவைகளை சூப்பராக சாப்பிடலாம். சிம்பிளாக ஒரு லஞ்ச் மெனு செய்யும் போது, இதை ட்ரை பண்ணி பாருங்க. வெரைட்டி ரைஸ்க்கு லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்கவும் இந்த பிரை ரெசிபி சூப்பரா இருக்கும். இது புலாவ் பிரியாணகும் அருமையான இணை உணவாக இருக்கும் கத்திரிக்காய் சாப்சா அல்லது கறி சாப்ஸ் என்ற டவுட் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தோன்றும். அத்தனை வாசம் நிறைந்த ரெசிபி இது.
பெரும்பாலும் கத்திரிக்காயை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது உடம்புக்கு கொஞ்சம் ஆரோக்கியம் தரக்கூடிய காய் ,ஒதுக்கி வைக்க வேண்டாம். வெரைட்டி ரைஸுக்கு சைடிஷ் ஆக, கத்திரிக்காய்களை இப்படி கத்திரிக்காய் சாப்ஸ் கொடுத்து பாருங்கள். கத்திரிக்காயை பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட, இதை விரும்பி விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். ரொம்ப ரொம்ப ஈஸியா கத்திரிக்காய் சாப்ஸ்எப்படி செய்வது. பதிவை தொடர்ந்து படியுங்கள்.
கத்திரிக்காய் சாப்ஸ் | Brinjal Chops Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கத்தரிக்காய்
- 1 ஸ்பூன் கடலை மாவு
- 1/2 ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 2 ஸ்பூன் மிளகு அரைக்க
- 1/2 ஸ்பூன் சோம்பு அரைக்க
- 1 பட்டை அரைக்க
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
செய்முறை
- கத்திரிக்காயை வட்ட வட்டமாக , கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள்.
- கத்திரிக்காயை மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
- அரைத்த மசாலா,கார்ன்ஃப்ளார், கடலைமாவு, உப்பு சேர்த்துப் பிசறி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
- பிரமாதமாக இருக்கும் இந்த கத்திரிக்காய் சாப்ஸ்.