Advertisement
சைவம்

‘கத்திரிக்காய் பூண்டு வறுவல்’ இப்படி மட்டும் செஞ்சி கொடுத்தால் ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் சலிக்காம சாப்பிடுவாங்க!

Advertisement

கத்திரிக்காயில் விதவிதமான வதக்கல், பொரியல், தொக்கு என்று செய்து சாப்பிட்டிருப்போம். சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையான சுவையில் கத்திரிக்காய் பூண்டு வறுவல் இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க வேண்டான்னு சொல்லவே மாட்டாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது போன்று செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.

கத்திரிக்காய் பூண்டு வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் பூண்டு வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும்.எப்படி இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பூண்டு சேர்த்து இப்படி ஒரு முறை பொன்னிறமாக வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க ரசம் சாதம், சாம்பார் சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பராக இருக்கும். அது மட்டும் அல்லாமல் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் என்று வெரைட்டி ரைஸுகளுக்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கத்திரிக்காய் பூண்டு வறுவல் | Brinjal Garlic Fry In Tamil

Print Recipe
கத்திரிக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் பூண்டு வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Brinjal Garlic Fry
Prep Time 3 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 15 பல் பூண்டு
  • 1/4 கிலோ கத்திரிக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்

Instructions

  • கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்முறை விளக்கம்: முதலில் கால் கிலோ அளவிற்கு நல்ல கத்திரிக்காயாக பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கத்திரிக்காய் இருந்தாலும் இந்த முறையில் நீங்கள் வறுவல் செய்யும் போது ரொம்பவே சுவையானதாக இருக்கும்.
  • இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில்
    Advertisement
    தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பூண்டு வறுபடும் பொழுதே ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து மெல்லியதாக நீளவாக்கில் பச்சடிக்கு நறுக்குவது போல நறுக்கி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  • வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கி வர வேண்டும். வெங்காயம் வதங்குவதற்கு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இவை மசிய வதங்கி வரும் வரை வதக்கி விடுங்கள்.
  • வெங்காயம், தக்காளி மசிந்ததும் நீங்கள் எடுத்து வைத்துள்ள கத்திரிக்காய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்தெந்த அளவுகளில் நறுக்கி கொள்ள வேண்டுமோ, அந்தந்த அளவுகளில் நறுக்கி சேர்க்க வேண்டும்.'
  • கத்திரிக்காய் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடுங்கள். கால் பாகம் கத்திரிக்காய் வெந்து சுருண்டு வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள்.
  • பின்னர் ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள். இடையிடையே திறந்து பார்த்து கிண்டி விடுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயின் சூட்டிலேயே கத்திரிக்காய் நன்கு மசாலாவுடன் சேர்த்து வறுபட்டு வரும்.
  • ஐந்தாறு நிமிடம் கழித்து நீங்கள் கத்திரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், இந்த சுவையான பூண்டு கத்திரிக்காய் வறுவல் எல்லா விதமான சாதம் மற்றும் வெரைட்டி ரைஸ்களுக்கு ரொம்பவே அற்புதமான காம்பினேஷனாக இருக்கும்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Fat: 2g | Sugar: 1g

இதையும் படியுங்கள் : சாப்பிட சாப்பிட திகட்டாத கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ஈசியாக இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

17 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago