சாப்பிட சாப்பிட திகட்டாத கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ஈசியாக இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது ரொம்பவே சுலபம் தான்! மசாலா வகைகளை சரியான அளவுகளில் சேர்த்து திக்காக இதே மாதிரியான முறையில் கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ஒருமுறை செஞ்சி பாருங்க, சாப்பிட சாப்பிட உங்களுக்கு சாப்பிட்டுகிட்டே இருக்கணும்னு தோணும். ருசியான கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி எளிமையாக செய்யலாம்.

-விளம்பரம்-

நாம ஒவ்வொருத்தரோட வீட்லயும், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒவ்வொரு மாதிரியாக வைப்போம். அந்த வரிசையில், ஒரு புதுவிதமான கர்நாடகா ஸ்டைல்  எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இங்கு செய்திருப்பது போல் சற்று கெட்டியாக செய்தால் பருப்பு சாதம், ரசம் சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும். மசாலா அரைக்கும் போது சற்று அதிகமாக அரைத்து சேர்த்து கிரேவியாக இறக்கினால் மிக அருமையாக இருக்கும். சப்பாத்தியோடு கர்நாடகாவில் கிடைக்கும் ஜோவார் மாவில் சப்பாத்தி போல் செய்து அதற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

- Advertisement -

காரசாரமான கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்துவிட்டு, சுடச்சுட சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், போதும். நாம் வடிக்கும் சாப்பாடு பத்தாது. . அந்த அளவிற்கு வீட்ல இருக்கிறவங்க நல்லா சாப்பிடுவாங்க. , இந்த கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி வைப்பது பார்க்கலாமா?

Print
3 from 5 votes

எண்ணெய் கத்திரிக்காய் | Ennai Kathirikai Recipe In Tamil

வீட்லயும், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒவ்வொருமாதிரியாக வைப்போம். அந்த வரிசையில், ஒரு புதுவிதமான கர்நாடகா ஸ்டைல்  எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை எப்படி வைப்பது என்பதைபற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காரசாரமான கர்நாடகா ஸ்டைல்எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்துவிட்டு, சுடச்சுட சாப்பாட்டில் போட்டு பிசைந்துசாப்பிட்டால், போதும். நாம் வடிக்கும் சாப்பாடு பத்தாது. . அந்த அளவிற்கு வீட்ல இருக்கிறவங்கநல்லா சாப்பிடுவாங்க. , இந்த கர்நாடகா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படிவைப்பது பார்க்கலாமா?
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Gravy, LUNCH
Cuisine: karnataka
Keyword: ennai kathirikai kulambu
Yield: 4
Calories: 351kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 குட்டி கத்திரிக்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • புளி சுண்டைக்காய் அளவு

அரைக்க

  • 1 மேசைக்கரண்டி வேர்க்கடலை
  • 2 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
  • 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • 4 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • கத்திரிக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு, படத்தில் உள்ளது போல் நான்காக கீறி உப்பு சேர்த்த தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் அரை மேசைக்கரண்டி வேர்க்கடலை மட்டும் தனியே எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்திருக்கும் மசாலாவை படத்தில் உள்ளது போல் கத்திரிக்காயினுள் நிரப்பவும். மீதமுள்ள மசாலாவை தனியே வைக்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
  • அதனுடன் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக வதக்கி தீயைக்குறைத்து மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும். இடையிடையே அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.
  • மீதமுள்ள மசாலாவை சேர்த்து, கால் கப் தண்ணீரில் புளியைக்கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும் கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக விடவும்.
  • தண்ணீர் வற்றி காய் குழைய வேகும் வரை(ஆனால் கத்திரிக்காய் உடைந்து விடக்கூடாது) குறைந்த தீயில் கிளறி இறக்கவும்.
  • சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார்.
  • உப்பை மசாலா அரைக்கும் போதே சேர்த்து விட வேண்டும். நல்லெண்ணெய்க்கு பதிலாக சாதாரண சமையல் எண்ணெயிலும் செய்யலாம்.

Nutrition

Serving: 250g | Calories: 351kcal | Carbohydrates: 63.2g | Protein: 11.2g | Trans Fat: 4g | Calcium: 31mg | Iron: 2.8mg