இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கு இந்த சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொத்சு இப்படி செய்து பாருங்கள்!!!

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு கொத்சு செய்யுங்கள். அதுவும் சிதம்பரம் ஸ்டைலில் கத்தரிக்காய் கொத்சு செய்து கொட

By Prem Kumar · 9/6/2024

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு கொத்சு செய்யுங்கள். அதுவும் சிதம்பரம் ஸ்டைலில் கத்தரிக்காய் கொத்சு செய்து கொடுங்கள். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

நம்முடைய பகுதியில் எளிதில் கிடைக்கும் இந்த கத்திரிக்காய் ஏகப்பட்ட பயன்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இவை வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் போன்ற நோய்களை குணப்படுத்தும் காய்கறிகளுள் ஒன்றாகவும் உள்ளன. கத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன. இப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள கத்திரியில் எப்படி கொத்சு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full