- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு கொத்சு செய்யுங்கள். அதுவும் சிதம்பரம் ஸ்டைலில் கத்தரிக்காய் கொத்சு செய்து கொடுங்கள். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
நம்முடைய பகுதியில் எளிதில் கிடைக்கும் இந்த கத்திரிக்காய் ஏகப்பட்ட பயன்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இவை வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் போன்ற நோய்களை குணப்படுத்தும் காய்கறிகளுள் ஒன்றாகவும் உள்ளன. கத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன. இப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள கத்திரியில் எப்படி கொத்சு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
Ingredients
Method
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மல்லி, வரமிளகாய், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் அதனை கையால் மசித்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் புளியை கரைத்து சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து மசித்து வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
அவ்வளவுதான் சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு தயார். இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சேர்த்து பரிமாறலாம்.






