வாய்க்கு ருசியான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல், ஒருமுறை இப்படி செய்து பாருங்க!
அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் ஒன்று தான். ஏனென்றால் கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொ
அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் ஒன்று தான். ஏனென்றால் கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் என பல காய்கறிகளுடன் இதனை சேர்த்து சமைக்க முடியும். அவ்வாறு கத்தரிக்காய் சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும்.
கத்தரிக்காயில் இருக்கும் சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தான். எந்த வகை காய்கறியாக இருந்தாலும் அதனை தவிர்க்காமல் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டு வந்தால் அதற்குரிய பலன்களும் நமக்குக் கிடைக்கும். கத்தரிக்காயில் இப்படி பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் செய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.