வாய்க்கு ருசியான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல், ஒருமுறை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் ஒன்று தான். ஏனென்றால் கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் என பல காய்கறிகளுடன் இதனை சேர்த்து சமைக்க முடியும். அவ்வாறு கத்தரிக்காய் சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

கத்தரிக்காயில் இருக்கும் சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தான். எந்த வகை காய்கறியாக இருந்தாலும் அதனை தவிர்க்காமல் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உணவில்  சேர்த்து கொண்டு வந்தால் அதற்குரிய பலன்களும் நமக்குக் கிடைக்கும். கத்தரிக்காயில் இப்படி பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் செய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
5 from 1 vote

கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்| Brinjal Stir fry

கத்தரிக்காய்சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காயில் இருக்கும் சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தான். எந்த வகை காய்கறியாகஇருந்தாலும் அதனை தவிர்க்காமல் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உணவில்  சேர்த்துகொண்டு வந்தால் அதற்குரிய பலன்களும் நமக்குக் கிடைக்கும். கத்தரிக்காயில் இப்படி பலஉணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்செய்து பாருங்கள். இதன் தனிப்பட்டசுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவுஅருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Brinjal Stir Fry
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 கத்தரிக்காய்
  • 1/2 கப் முளைக்கட்டிய தட்டைப்பயறு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • உப்பு தேவைக்குஏற்ப
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி

தாளிக்க

  • எண்ணெய் சிறிது அளவு
  • கடுகு சிறிது அளவு
  • சீரகம் சிறிது அளவு
  • கறிவேப்பிலை சிறிது அளவு
  • கொத்தமல்லித்தழை சிறிது அளவு

செய்முறை

  • கத்தரிக்காய்,வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். முளைக்கட்டிய தட்டைப்பயிறை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கிவிட்டு அதனுடன் வேகவைத்த தட்டைப்பயறை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். எல்லாம் சேர்ந்து சுருள வெந்ததும் ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
  • சத்தான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் தயார்.

Nutrition

Serving: 420g | Calories: 112kcal | Protein: 9g | Cholesterol: 1.2mg | Fiber: 2g | Sugar: 0.5g