ப்ரோக்கோலி பொரியல் இப்படி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்!!!

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன்

By Prem Kumar · 18/11/2023

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மதிய வேளையில் என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் ப்ரோக்கோலி உள்ளதா? அப்படியானால் காயை கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் பொரியல் செய்யலாம்.

அதுவும் இதைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் ப்ரோக்கோலி பொரியல் செய்தால், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த காயில் உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதால், அடிக்கடி இவற்றை உணவில் சேர்த்து வருவது நல்லது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமலும் அதே நேரம் வயிறு பசியும் அடங்கும் படியாக சில உணவுகள் உள்ளது.

ஆம், ப்ரோக்கோலி பொரியல் செய்து சாப்பிடும் பொழுது நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் அதனால் உங்கள் எடை கூடாது ஏனென்றால் அதில் குறைந்த அளவு கலோரிகளை இருக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. ப்ரோக்கோலியை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை இப்படி செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

Recipes AMP · Quick view
View full