ப்ரோக்கோலி பொரியல் இப்படி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்!!!

- Advertisement -

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மதிய வேளையில் என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் ப்ரோக்கோலி உள்ளதா? அப்படியானால் காயை கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் பொரியல் செய்யலாம்.

-விளம்பரம்-

அதுவும் இதைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் ப்ரோக்கோலி பொரியல் செய்தால், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த காயில் உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதால், அடிக்கடி இவற்றை உணவில் சேர்த்து வருவது நல்லது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமலும் அதே நேரம் வயிறு பசியும் அடங்கும் படியாக சில உணவுகள் உள்ளது.

- Advertisement -

ஆம், ப்ரோக்கோலி பொரியல் செய்து சாப்பிடும் பொழுது நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் அதனால் உங்கள் எடை கூடாது ஏனென்றால் அதில் குறைந்த அளவு கலோரிகளை இருக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. ப்ரோக்கோலியை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை இப்படி செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

Print
No ratings yet

ப்ரோக்கோலி பொரியல் | broccoli poriyal recipe in tamil

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மதிய வேளையில் என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் ப்ரோக்கோலி உள்ளதா? அப்படியானால் காயை கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் பொரியல் செய்யலாம். அதுவும் இதைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் ப்ரோக்கோலி பொரியல் செய்தால், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த காயில் உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதால், அடிக்கடி இவற்றை உணவில் சேர்த்து வருவது நல்லது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: broccoli poriyal
Yield: 4 People
Calories: 55kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 ப்ரோக்கோலி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 பச்சை மிளகாய்
  • 1 சிகப்பு மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ப்ரோக்கோலியை சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி ப்ரோக்கோலியை 5 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.
  • பின் தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் 2 முறை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்‌ கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு பச்சை மிளகாய் மற்றும் சிகப்பு மிளகாய் சேர்க்கவும். அதன்பிறகு, வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு அடுப்பை சிம்மில் வைத்து நாம் நறுக்கி வைத்துள்ள ப்ரோக்கோலி மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
  • ப்ரோக்கோலி வதங்கியதும், துருவின தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான ப்ரோக்கோலி பொரியல் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 55kcal | Protein: 17g | Fat: 0.5g | Sodium: 20mg | Potassium: 673mg | Fiber: 5.1g | Vitamin A: 103IU | Vitamin C: 29mg | Calcium: 107mg | Iron: 7mg