ப்ராக்கோலி புலாவ் இப்படி மட்டும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடித்த உணவு பட்டியலில் இதுவும் ஒன்றாக சேரும்!

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல

By ·

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. இவை பெரும்பாலும் சைவப் பிரியர்கள் பன்னீர் பட்டர் மசாலா அல்லது ரைத்தாவை வைத்தும், அசைவப் பிரியர்கள் முட்டை அல்லது சிக்கன் கறி வைத்து உண்கிறார்கள்.

இந்த பழமையான உணவு வகை முகலாய படையெடுப்பின் போது இந்தியாவுக்கு வந்ததாக ஒரு சாராரும், மற்றொரு சாரார் இவை பண்டைய கால இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல டர்க்கி, கிரிக் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர். நாம் இந்த பதிவில் சற்று ‌வித்தியாசமாக புரோக்கோலி புலாவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை