உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு சற்று வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா அப்படியானால் இந்த ப்ரோக்கோலி சாதம் செய்து கொடுங்கள்!!!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

By Prem Kumar · 25/8/2024

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் சுவையான ப்ரோக்கோலி சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். ப்ரோக்கோலி சாதம் ஒரு எளிதான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம்.

குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த ப்ரோக்கோலி வைத்து சுவையான சாதத்தை செய்து விட முடியும். இந்த புரோக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதய நோய்கள் வருவதை தடுக்கும் அளவிற்கு நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது ப்ரோக்கோலி. இந்த பச்சை நிற காலிபிளவர் போன்று இருக்கும் ப்ரோக்கோலி அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல்நலம் வலுவாகும். இதில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரி செய்யும்.

இந்த ப்ரோக்கோலியை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.‌ அந்த வகையில் இந்த ப்ரோக்கோலியை கொண்டு ரொம்பவே ஈசியாக டேஸ்டியான சாதம் எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. ப்ரோக்கோலியை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை இப்படி சாதம் செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான ப்ரோக்கோலி டிக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full