ருசியான ப்ரோக்கோலி டிக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

ப்ரோக்கோலி டிக்கா ஒரு மிருதுவான மற்றும் மொறுமொறுப்பான தின்பண்டமாகும், இது காலிஃபிளவர் 65 போன்றது. இது ஒரு எளிய மற்றும் விரைவான சிற்றுண்டி மற்றும் வறுத்த உணவுக்கான பசியைத் திருப்திப்படுத்தும் ஒரு சுவையான உணவாகும்.

-விளம்பரம்-

நாம் அன்றாட வாழ்வில் ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆரோக்கியமான உணவுகளை பற்றி நாம் சிந்திக்கும் போது நினைவுக்கு வரும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று. இந்த பதிவில் சுவையான ப்ரோக்கோலி டிக்கா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

ப்ரோக்கோலி டிக்கா | Broccoli Tikka Recipe in Tamil

ப்ரோக்கோலி டிக்கா ஒரு மிருதுவான மற்றும் மொறுமொறுப்பான தின்பண்டமாகும், இது காலிஃபிளவர் 65 ஐப் போன்றது. இது ஒரு எளிய மற்றும் விரைவான சிற்றுண்டி மற்றும் வறுத்த உணவுக்கான பசியைத் திருப்திப்படுத்தும் ஒரு சுவையான உணவாகும். இது மைதா, கார்ன்ஃப்ளார், அரிசி மாவு மிளகாய் தூள் மற்றும் எண்ணெயில் ஆழமாக வறுக்கப்படுகிறது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Fry, Side Dish
Cuisine: Indian
Keyword: tikka
Yield: 4 People

Equipment

  • 1 கரண்டி
  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 350 கிராம் ப்ரோக்கோலி
  • 2 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர்
  • 1 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • எண்ணெய் தேவையான

செய்முறை

  • ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக வெட்டி சுடுதண்ணியில் சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  • பிறகு ஒரு பௌலில் கெட்டித் தயிர், மிளகாய்த்தூள், கரம்மசாலா, மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • வேக வைத்த பிரக்கோலி சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  • பிறகு இதில் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  • தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைத்த ப்ரோக்கோலியை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையான ஆரோக்கியமான ப்ரோக்கோலி டிக்கா தயார் இதனைப் புதினா கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

Nutrition

Serving: 500g | Potassium: 316mg | Vitamin A: 623IU | Vitamin C: 89.2mg | Calcium: 47mg | Iron: 0.73mg

இதனையும் படியுங்கள்: கமகமக்கும் காலிஃபிளவர் கறி குழம்பு செய்வது எப்படி ?