சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்த ப்ரோக்கோலி சூப் இப்படி செய்து பாருங்கள்!!

சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் சைவ பிரியராக ப்ரோக்கோலி கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும

By Prem Kumar · 20/8/2024

சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் சைவ பிரியராக ப்ரோக்கோலி கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். வீட்டில் உள்ளவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் போது நாம் சூப் போன்றவை செய்து பருகினால் கொஞ்சம் ரீலீஃப் கிடைக்கும். சூப்பில் மட்டன் சூப், சிக்கன் சூப், வெஜ் சூப், மஷ்ரூம் சூப், கார்ன் சூப் என்று பல விதமான சூப்களை செய்யலாம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் ப்ரோக்கோலி சூப் செய்முறையை காண உள்ளோம். இந்த புரோக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதய நோய்கள் வருவதை தடுக்கும் அளவிற்கு நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது ப்ரோக்கோலி. இந்த பச்சை நிற காலிபிளவர் போன்று இருக்கும் ப்ரோக்கோலி அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல்நலம் வலுவாகும். இதில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரி செய்யும். இந்த ப்ரோக்கோலி சூப்பினை ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். இதனை செய்யும் போதே வீட்டில் உள்ள அனைவரும் எப்போது அருந்த கொடுப்பீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான ப்ரோக்கோலி டிக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full