பிஸிபேளாபாத் என்பது வடமாநிலங்களில் அதிகமாக உண்ணப்படும் ஒரு உணவு வகையாகவும், குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. அவ்வகையில் இந்த பிஸிபேளாபாத் ப்ரவுன்ரைஸ் உயோகித்து செய்தால் அருமையாக இருக்கும். நம்மூரில் புளிசாதம், சாம்பார் சாதம் செய்வது போன்று இந்த பிஸிபேளாபாத் உணவு கர்நாடக மாநிலத்தில் இது மிகவும் பிரசித்தம்.
இந்த பதிவில் பிரவுன் அரிசி வைத்து பிஸிபேளாபாத் எப்படி செய்வது என்று பார்ப்போம் பிரவுன் அரிசி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் பழுப்பு அல்லது சிவப்பு அரிசியில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகளவில் உள்ளதால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
நாளைக்கு காலையில குழந்தைகளுக்கும் கணவருக்கும் லஞ்ச் பாக்ஸுக்கு சுவையாக, சிம்பிளாக அதே சமையல் ஆரோக்கியமானதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, கை கொடுக்கும் ரெசிபி இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் . ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பாரம்பரியமான முறையில் இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் பக்குவமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் | Brownrice Bisibelabath Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ப்ரவுன் ரைஸ்
- 1/4 கப் துவரம் பருப்பு
- 2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 பூண்டு
- 1 துண்டு பரங்கிக்காய்
- 4 கத்திரிக்காய்
- 1 கப் பட்டாணி
- 1 உருளை
- 1 வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- புளி சிறிதளவு
- உப்பு தேவைக்கு ஏற்ப
- 1 தேக்கரண்டி சாம்பார்பொடி
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவைக்கு ஏற்ப
- 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
தாளிக்க
- 1/2 தேக்கரண்டி கடுகு தாளிக்க தேவைக்கு ஏற்ப
- 1/2 தேக்கரண்டி சீரகம் தாளிக்க தேவைக்கு ஏற்ப
- 5 வெந்தயம் தாளிக்க தேவைக்கு ஏற்ப
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- முந்திரி தாளிக்க தேவைக்கு ஏற்ப
- வெண்ணெய் தாளிக்க தேவைக்கு ஏற்ப
செய்முறை
- காய்கறிகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- குக்கரில் பருப்பு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளாவும்.அதேகுக்கரில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- காய்கள் நன்கு வெந்ததும் ப்ரவுன் ரைஸ், பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதன்பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- வாணலியில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பில்லை, முந்திரிசேர்த்து தாளிக்கவும், தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.
- மேலே கொத்தமல்லி தூவவும், சுவையான ப்ரவுன் ரைஸ் பிளிபேளாபாத் ரெடி.