புதனின் பெயர்ச்சியால் புத்தாண்டு தொடக்கத்திலேயே இந்த 3 ராசிகளுக்கு பம்பர் பலன்கள் தான்!!
புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி 2025-ம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் புத்தாண்டின் தொடக்கத்தில் பல பெரிய கிரகங்களின் ராசிகள் மாறப்போகிறது. இந்த கிரகங்களில் புதனும் ஒன்று. சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுக
புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி 2025-ம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் புத்தாண்டின் தொடக்கத்தில் பல பெரிய கிரகங்களின் ராசிகள் மாறப்போகிறது. இந்த கிரகங்களில் புதனும் ஒன்று. சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறது. புதனின் மாற்றத்தால் ஏராளமான ராசிகள் நன்மையே பெறுவார்கள். ஏனென்றால் புதன் நன்மையே செய்வார் எனவும் சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கிரகங்களின் இளவரசன் புதன் ராசி மாற உள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். குறிப்பாக சிம்மம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கப்போகிறது.
சிம்மம்
புதன் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த இடம் வீடு கல்வி, அன்பு ஆகியவற்றுக்கு சொந்தமானது. காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். 2025 ஆம் ஆண்டு குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு இனிமையாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும், திருமண வாழ்க்கையில் இனிமை உண்டாகும், சமூகத்தில் மரியாதை கூடலாம், வேலையில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
நீங்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமானது. உங்கள் நிதி நிலை மேம்படும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறலாம். நீங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியில் மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், துலாம் ராசியினர் வேலையில் வெற்றி பெறுவார்கள். பண உதவி கிடைக்கலாம். வியாபாரத்தில் மிகப் பெரிய ஆர்டரை பெறலாம். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம்
செல்வம் மற்றும் சாதனைகள் நிறைந்த கும்ப ராசியின் லாப வீட்டில் புதன் சஞ்சரிப்பார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் பழைய முதலீடுகளால் ஆதாயம் பெறுவார்கள். இந்த நேரம் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் அமையும். சிறப்பு நபரின் உதவியுடன் பெரிய திட்டத்தை முடிப்பீர்கள். பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடையும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள்.
இதனையும் படியுங்கள் : 2025 புத்தாண்டில் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!!