ஜோதிடத்தின்படி 2025ல் புதிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு ராசியின் மனநிலை ஒவ்வொரு விதமாக இருக்கும் தொழில் வேலை பணம் என அனைத்து விஷயங்களிலும் நேர்மறையான எண்ணங்களோடு செயல்பட்டால் புத்தாண்டு சிறப்பானதாக அமையும் அதனை எப்படி அமைத்துக் கொள்வது என்பதை பற்றியும் 2025 கிடைக்கப் போகும் பலன்களை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு 2025ல் ஏழரை சனியின் தொடங்குவதால் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். புதிய வாய்ப்புகள் அனுபவங்கள் பெற முடியும் குடும்பத்திலும் பணியிடத்திலும் பிறருடன் இணக்கமாக நடந்து கொண்டு வலுவான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில் மற்றும் வியாபாரத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷப ராசி

ரிஷப ராசியினர் 2025 இல் சவாலான காலகட்டங்களை சமாளிக்கவே வேண்டியதாக இருக்கும். ஒழுக்கம் பொறுமை என அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும் பொறுமை இருந்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம். கடந்த கால தவறுகளிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு செயல்படுவது நல்லது. அனைத்து விஷயங்களிலும் தனித்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.
மிதுன ராசி

மிதுன ராசியினருக்கு 2015 புத்தாண்டு மிகவும் சிறப்பானதாக இருந்தாலும் கூட நிதி நிலைமை தனிப்பட்ட வளர்ச்சியை பாதிக்க நேரிடலாம் எனவே சற்று கவனமாக செயல்பட வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதும் அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவதும் நல்லது இதனால் நீங்கள் நினைத்த இடத்தை அடைய முடியும்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமி சனி விலகும் எனவே புத்தாண்டில் புதிய வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். உங்களின் குடும்பத்தில் உறவு வலுவாக இருக்கும் நிதானமாக நடந்து கொண்டால் மகிழ்ச்சியும் மன நிறைவும் நிறைந்திருக்கும் எனவே நிதானமாக நடந்து கொண்டு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக மாற்றுங்கள்.
சிம்ம ராசி

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் பொறாமை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டிய ஆண்டுதான் 2025. தொடர் முயற்சி நேர்மறையான எண்ணங்கள் கடின உழைப்பு இருந்தால் அனைத்து தடைகளையும் உங்களால் சமாளித்து சாதிக்க முடியும் இந்த ஆண்டில் உங்களுடைய ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும்.
கன்னி ராசி

கன்னி ராசிக்கு 2025 ஆம் ஆண்டில் நல்ல பலன்கள் கிடைக்கும் வேலை தொழில் அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் உறுதியோடு செயல்படுவதால் அனைத்து விஷயங்களிலும் மன உறுதியோடு இருக்க முடியும். அனைத்து விஷயங்களிலும் உறுதியாக முடிவெடுத்தால் வெற்றி பெறலாம். இது பெரிய மாற்றத்தையும் உங்கள் வாழ்க்கையில் அமைத்துக் கொடுக்கும்
துலாம் ராசி

விழுவதால் பலவிதத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இணைவாற்றல் மன அமைதி அனைத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. மேலும் இந்த ஆண்டில் பல சாதனைகளையும் படைக்க முடியும்.
விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்களுடைய உள்ளுணர்வை நம்புவது மிகவும் நல்லது புதிய அனுபவங்களை பெற முடியும் உங்களின் ஆர்வம் மற்றும் அறிவாற்றலுடன் பெரிய விஷயங்களையும் சாதிக்க முடியும் எனவே மிகவும் முனைப்போடு செயல்படுவது நல்லது.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆர்வத்தோடு செயல்படுவதற்கான மன உறுதியை கொடுக்கும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஒரு உந்துதல் கிடைக்கும் நிதானமாக இருப்பது அனைத்திலும் நல்லது வேலை தொழிலில் நிதானம் உங்களுடைய இலக்குகளை அடைய வைக்கும்.
மகர ராசி

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு ஏழரை சனி முடிய போவதால் புத்தாண்டில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும் கடந்த கால தவறுகளை சரி செய்து அனைத்து இழப்புகளையும் நினைவில் வைத்து அனுபவத்தோடு செயல்படுவது நல்லது. இதனால் உங்களுக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வாழ்க்கை உருவாகும்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிய போவதால் ஆபத்துகள் குறையும் ஆனாலும் கூட வேலையில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் வேலை வியாபாரம் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும். இது உங்களை நல்ல நிலைமைக்கு எடுத்துச் செல்லும்.
மீன ராசி

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு ஏழரை சனி தொடங்கப் போவதால் உங்களுடைய திறமைகளை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே உங்களுடைய இலக்குகளை அடைய முடியும். மன அமைதி உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வதில் கவனம் தேவை கடின உழைப்பு இருந்தால் உங்களால் அனைத்திலும் வெற்றி பெற முடியும்.
இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சியால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் இவை தான்!!


