மாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட சுவையான முட்டைக்கோஸ் ஃப்ரை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால், அதைக் கொண்டு முட்டைக்கோஸ் ஃப்ரை செய்து கொடுங்கள். முட்டைகோஸ் வெயில், குளிர் காலம் என அனைத்து சீசனிலும் கிட

By Prem Kumar · 20/9/2025

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால், அதைக் கொண்டு முட்டைக்கோஸ் ஃப்ரை செய்து கொடுங்கள். முட்டைகோஸ் வெயில், குளிர் காலம் என அனைத்து சீசனிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான காய்கறி. முட்டைக்கோஸ் என்றாலே காத தூரம் சென்று விடுவார்கள் குழந்தைகளுடன் பெரியவர்களும். காரணம் அதில் வீசும் ஒருவித கந்தக மணம்.

இருப்பினும் அதிலுள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொண்டால் அதை தவிர்க்கவே மாட்டோம் என்பதுதான் உண்மை. முட்டைகோஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். வைட்டமின் சி, வைட்டமின் கே, தியாமின், நியாசின், ஃபோலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முட்டைக்கோஸ் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டைகோஸ் சாப்பிடுவதால் பல சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே முடக்கு வாதம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸ் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். முட்டைகோஸ் பொரியல் ஃப்ரைடு ரைஸ், முட்டைக்கோஸ் வைத்து கூட்டு, முட்டைக்கோஸ் சாம்பார் இதெல்லாம் வெச்சு போர் அடிச்சு போச்சுன்னா அப்போ இனிமேல் முட்டைக்கோஸ் வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான ஃப்ரை ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த முட்டைக்கோஸ் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும்.

ஒரு தடவை இந்த ரெசிப்பியை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எல்லாருமே உங்ககிட்ட அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பாங்க. ஈவினிங் டைம்ல டீ காபி ஓட இந்த முட்டைகோஸ் ஃப்ரை வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா உங்களுக்கு எப்பவும் பஜ்ஜி வடை அப்படின்னு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை டேஸ்டான முட்டைக்கோஸ் ஃப்ரை செஞ்சு பாருங்க. இப்ப வாருங்கள் சுவையான முட்டைக்கோஸ் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு முட்டைக்கோஸ் சாதம் இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவ செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full