நம்ம எல்லாருமே பொதுவா முட்டைக்கோஸ் பொரியல் சாப்பிட்டு இருப்போம் ஆனால் முட்டைக்கோஸ்ல சாதம் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். கேரட் சாதம் பீட்ரூட் சாதம் இதெல்லாம் கூட இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்லயும் பேக் பண்ணி கொடுத்திருப்போம். ஆனால் முட்டைக்கோஸ்ல முட்டைக்கோஸ் கிரேவி முட்டை கோஸ் கூட்டு முட்டைகோஸ் பொரியல் இது மட்டும் தான் செஞ்சிருப்போம். ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா ஆரோக்கியமான காயான இந்த முட்டைக்கோஸ் வச்சு சூப்பரான சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி முட்டைகோஸ் சாதம் செய்ய போறோம்.
இந்த முட்டைகோஸ் சாதம் சுட சுட சாப்பிடுவதற்கு சூப்பரா இருக்கும். முதலில் முட்டைகோஸ் அரைவேக்காடு வெந்ததும் அதுக்கப்புறம் இந்த முட்டைகோஸ் சாதம் செஞ்சோம் அப்படின்னா சுவை தாறுமாறா இருக்கும். இந்த முட்டைகோஸ் சாதத்துக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்பட போறது கிடையாது கொஞ்சமா முட்டைக்கோஸ் இருந்தாலே போதும் சூப்பரா வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த முட்டைகோஸ் சாதம் செஞ்சு முடிச்சிடலாம். இந்த முட்டைகோஸ் சாதத்துக்கு சைடிஸ் கூட எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கிறதால வாசனை ரொம்பவே அருமையா இருக்கும்.
சூப்பர் டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க. குழந்தைகளுக்கு என்ன டிபன் பாக்ஸ் கொடுக்கிறது அப்படின்னு குழப்பமா இருந்தா யோசிக்கவே யோசிக்காதீங்க முட்டைகோஸ் இருந்தால் இந்த சுவையான முட்டைகோஸ் சாதம் செஞ்சிருங்க. சுட சுட சூடான முட்டைகோஸ் சாதம் செஞ்சு வச்ச உடனே கண்டிப்பாக காலியாகிவிடும். காலைல செஞ்சு சாதம் மீதம் ஆயிடுச்சு அப்படின்னா அதுல தண்ணி ஊத்தி பழைய சாதமா மாத்தாம நைட்டுக்கு சுடு சுட முட்டைக்கோஸ் சாதமா மாத்திடுங்க.
சுவையான இந்த முட்டைகோஸ் சாதம் எவ்வளவு சாப்பிடறோம்னு கணக்கே இல்லாம சாப்பிடுவோம் சுடச்சுட இருக்கிறதால நல்லா ருசித்து சாப்பிட முடியும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த முட்டைகோஸ் சாதம் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க.ஆரோக்கியமான முட்டைக்கோஸ் பொரியல் செஞ்சு கொடுத்தா ஒரு சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க ஆனா முட்டைகோஸ் சாதமா செஞ்சா கண்டிப்பா சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான முட்டைகோஸ் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முட்டைக்கோஸ் சாதம் | Cabbage Sadam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் வடித்த சாதம்
- 1/4 கப் முட்டைக்கோஸ்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 துண்டு இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
- 4 பல் பூண்டு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் முட்டை கோஸ் உடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இடித்த இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கியதும் மிளகாய் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- வேகவைத்த முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக கிளறியதும் வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டைக்கோஸ் சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க வரகு ரசம் சாதம் குக்கரில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!!