முட்டைகோஸ் வைத்து இந்த ருசியான மசாலா சாதம் இப்படி செய்து அசத்துங்கள்! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி!
சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத பொழுது இந்த முட்டைகோஸ் வைத்து சுவையான மசாலா அரைத்து இந்த சாதத்தை செய்துவிட மு
சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத பொழுது இந்த முட்டைகோஸ் வைத்து சுவையான மசாலா அரைத்து இந்த சாதத்தை செய்துவிட முடியும்.
முட்டைக்கோஸ் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பது நமக்குத் தெரியும். அதோடு வைட்டமின்களும் தாதுப் பொருள்களும் அதிகம். முட்டைகோஸில் அதிக அளவில் விட்டமின் கே இருப்பதால் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கும். இதனை காலையில் வடித்த மிஞ்சிய சாதத்தில் செய்து கொடுக்க மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதற்கு பத்து நிமிடத்திற்கும் குறைவாகத்தான் நேரம் செலவாகும். முட்டைக்கோஸ் இருக்கா உங்க வீட்ல? அப்படினா யோசிக்காம நீங்க இந்த முட்டைகோஸ் சாதத்தை கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கணும். நிறைய பேருக்கு முட்டைக்கோசை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது.
முட்டைக்கோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த மசாலா சாதத்தை இந்த முறையில் செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். சூப்பரான முட்டைகோஸ் மசாலா சாதம் ரெசிபி உங்களுக்காக.