ருசியான கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் இனி இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

முட்டைகோஸ் பொரியல் தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பொரியல் வகை. இது விரைவாக செய்யக்கூடிய ஒரு பொரியல் வகை. எல்லா வகையான சாதத்துடனும் சுவையாக இருக்கும். என்னதான் வீட்டில் பலவித உணவுகள் சமைத்துக் கொடுத்தாலும் ஓட்டல்களிலும், விருந்துகளிலும் கிடைக்கும் சுவை வீட்டில் செய்யும் உணவில

By Prem Kumar · 20/2/2024

முட்டைகோஸ் பொரியல் தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பொரியல் வகை. இது விரைவாக செய்யக்கூடிய ஒரு பொரியல் வகை. எல்லா வகையான சாதத்துடனும் சுவையாக இருக்கும். என்னதான் வீட்டில் பலவித உணவுகள் சமைத்துக் கொடுத்தாலும் ஓட்டல்களிலும், விருந்துகளிலும் கிடைக்கும் சுவை வீட்டில் செய்யும் உணவில் கிடைப்பதில்லை. எனவே தான் பலரும் வெளியில் சாப்பிடுவதை அதிகமாக விரும்புகின்றனர். அப்படி கல்யாணம் என்றாலே சாம்பார் சாதம் மற்றும் பிரியாணி தான் மிகவும் விசேஷமானது. சாம்பார் சாதம் போடப்படும் திருமண விழாக்களில் அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கு வருவல், கோஸ் பொரியல் வைப்பது தான் பலரின் வழக்கமாக இருக்கிறது. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத கல்யாண பந்திகளில் இந்த வகை பொரியல்கள் தான் இடம் பெறுகிறது. இந்தப் பொரியல்களை பலமுறை வீட்டிலும் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவற்றின் சுவையை விட இந்த திருமணங்களில் போடப்படும் பொரியல்களின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். எனவே இந்த காய்கறிகள் பிடிக்காதவர்கள் கூட அதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த முட்டைகோஸ் பொரியல் செய்வது மிகவும் எளிமையானது. மேலும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வண்ணமயமாகவும் இருக்கும். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவை அலாதியாக இருக்கும். சரி, அந்த கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான முட்டைக்கோஸ் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க ?

Recipes AMP · Quick view
View full