- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
முட்டைகோஸ் பொரியல் தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பொரியல் வகை. இது விரைவாக செய்யக்கூடிய ஒரு பொரியல் வகை. எல்லா வகையான சாதத்துடனும் சுவையாக இருக்கும். என்னதான் வீட்டில் பலவித உணவுகள் சமைத்துக் கொடுத்தாலும் ஓட்டல்களிலும், விருந்துகளிலும் கிடைக்கும் சுவை வீட்டில் செய்யும் உணவில் கிடைப்பதில்லை. எனவே தான் பலரும் வெளியில் சாப்பிடுவதை அதிகமாக விரும்புகின்றனர். அப்படி கல்யாணம் என்றாலே சாம்பார் சாதம் மற்றும் பிரியாணி தான் மிகவும் விசேஷமானது. சாம்பார் சாதம் போடப்படும் திருமண விழாக்களில் அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கு வருவல், கோஸ் பொரியல் வைப்பது தான் பலரின் வழக்கமாக இருக்கிறது. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத கல்யாண பந்திகளில் இந்த வகை பொரியல்கள் தான் இடம் பெறுகிறது. இந்தப் பொரியல்களை பலமுறை வீட்டிலும் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவற்றின் சுவையை விட இந்த திருமணங்களில் போடப்படும் பொரியல்களின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். எனவே இந்த காய்கறிகள் பிடிக்காதவர்கள் கூட அதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த முட்டைகோஸ் பொரியல் செய்வது மிகவும் எளிமையானது. மேலும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வண்ணமயமாகவும் இருக்கும். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவை அலாதியாக இருக்கும். சரி, அந்த கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான முட்டைக்கோஸ் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க ?
Ingredients
Method
முதலில் முட்டைகோஸ், கேரட், வெங்காயம் ஆகியவற்றை தண்ணீரில் அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கோஸையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அதனுடன் கேரட், பட்டாணி சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
முட்டைகோஸ் வெந்ததும் அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து கலந்து விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றி கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான அருமையான கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் தயார்.






