காரசாரமான குடைமிளகாய் பெப்பர் சாதம் ஒரு தரம் இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

By Prem Kumar · 26/2/2024

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான குடைமிளகாய் மிளகு சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், பிரைடு ரைசை விட சூப்பராக இருக்கும். இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் குடைமிளகாய் மிளகு சாதம் மிகவும் புதிதானது. அதிலும் குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. எனவே இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும்.

இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள குடைமிளகாயை வைத்து ஒரு கலவை சாதம் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும். இதற்கு அதிக பட்சம் ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தாலே போதும். மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள், பச்சை, சிவப்பு நிற குடைமிளகாயை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும். குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகக்கு இந்த மாதிரி கலர் புஃள்ளாக செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியாக காளான் குடைமிளகாய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க எவ்வளவு செய்தாலும் பத்தாது!

Recipes AMP · Quick view
View full