- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Fry, LUNCH
காளான் மற்றும் குடைமிளகாய் சிறிது மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவாரஸ்யமான பொரியல் ரெசிபி. சப்பாத்தி மற்றும் வேகவைத்த சாதத்துடன் கூட நீங்கள் ருசிக்கக்கூடிய எளிதான மற்றும் காரமான ரெசிபி இது. , ஒரு சுவையான வட இந்திய ரெசிபி மற்றும் மிகவும் பிரபலமான காளான் ரெசிபிகளில் ஒன்றாகும். வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி காளான் குடைமிளகாய் பொரியல் செய்து பாருங்க. சமையலறை பொருட்களுடன் இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
காளான் குடைமிளகாய் பொரியல் என்பது மிகவும் காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவு பொருளாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும் இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத் தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளான் குடைமிளகாய் பொரியல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்க : இப்படி மசாலா அரைத்து ஒரு முறை காளான் கிரேவி செய்து பாருங்க! இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்!
Ingredients
Method
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்னர் பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்துபிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்குவெந்தது தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காளான் குடைமிளகாய் வறுவல் ரெடி!!!






