இப்படி மசாலா அரைத்து ஒரு முறை காளான் கிரேவி செய்து பாருங்க! இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்!

- Advertisement -

எல்லோர் வீட்டிலும் தான் குருமா வைப்போம். ஆனால் காளான் கிரேவி கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக சேர்த்து  இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைட் டிஷ் இது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த காளான் கிரேவி கொஞ்சம் உருளை கிழங்கு  சேர்க்கப் போகின்றோம்.

-விளம்பரம்-

மஷ்ரூமை வைத்தது ரெஸ்டாரண்டில் வாங்கி சாப்பிடும் கிரேவிகளுக்கு சுவை அதிகம். அதைவிட அதனுடைய விலையும் அதிகம். நம்முடைய வீட்டிலேயே இந்த காளான் கிரேவி, எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய குழந்தைகளுக்கு, இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி இப்படி எதற்கு வேண்டுமென்றாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சில நிமிஷத்துல, அருமையான ருசியில், ரொம்ப ரொம்ப சுலபமாக கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?

- Advertisement -
Print
5 from 1 vote

காளான் கிரேவி | Mushroom Gravy Recipe In Tamil

மஷ்ரூமை வைத்தது ரெஸ்டாரண்டில் வாங்கி சாப்பிடும்கிரேவிகளுக்கு சுவை அதிகம். அதைவிட அதனுடைய விலையும் அதிகம். நம்முடைய வீட்டிலேயே இந்தகாளான் கிரேவி, எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். உங்களுடைய குழந்தைகளுக்கு, இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி இப்படி எதற்குவேண்டுமென்றாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சில நிமிஷத்துல, அருமையான ருசியில்,ரொம்ப ரொம்ப சுலபமாக கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: tamil nadu
Keyword: mushroom gravy
Yield: 4
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ காளான்
  • 2 உருளை கிழங்கு
  • 2 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1/2 கப் தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கேற்ப
  • 5 முந்திரி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் காளானை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், , தனியா, தேங்காய் மற்றும் முந்தி இதையெல்லாம் எண்ணெயில்லாமல் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின் எண்ணெயில் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பின் அரை வேக்காடு வேக வைத்த காளான், உருளை கிழங்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  • பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின் அரைத்த விழுதை மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது சூடான ருசியான காளான் கிரேவி தயார்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்:சப்பாத்தி மற்றும் தோசை, இட்லி மற்றும் சாதத்திற்கு வைத்து உண்ணலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Fat: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg