குடைமிளகாய் சென்னா மசாலாவை ஒரு முறை இப்படி வீட்டில் செய்து பாருங்கள், அவ்வளவு!
சன்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அனைத்து ஹோட்டல்களிலும் சன்னா மசாலா கிடைக்கும். ஆனால், அதனை வீட்டில் கேப்சிகம் சேர்த்து எப்படி சுலபமாக சமைப்பது. குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பத
சன்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அனைத்து ஹோட்டல்களிலும் சன்னா மசாலா கிடைக்கும். ஆனால், அதனை வீட்டில் கேப்சிகம் சேர்த்து எப்படி சுலபமாக சமைப்பது. குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.
சன்னா மசாலா, மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு கறி உணவாகும். வட இந்தியாவில், சன்னா மசாலாவை ‘சோலே மசாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
சன்னா மற்றும் சோலே ஆகிய இரண்டு சொற்களும் கொண்டைக்கடலையைக் குறிக்கின்றன. இந்த சைவ இந்திய சுண்டல் கறியை ஒரு முக்கிய உணவாக அல்லது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். வளர்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில் இருக்கும் புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கேப்சிகம் சென்னா மசாலாவை அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும் வாருங்கள் இந்த சுவையான கேப்சிகம் சென்னா மசாலாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.