குடைமிளகாய் சென்னா மசாலாவை ஒரு முறை இப்படி வீட்டில் செய்து பாருங்கள், அவ்வளவு!

- Advertisement -

சன்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அனைத்து ஹோட்டல்களிலும் சன்னா மசாலா கிடைக்கும். ஆனால், அதனை வீட்டில் கேப்சிகம் சேர்த்து எப்படி சுலபமாக சமைப்பது. குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.

-விளம்பரம்-

சன்னா மசாலா, மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு கறி உணவாகும். வட இந்தியாவில், சன்னா மசாலாவை ‘சோலே மசாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

- Advertisement -

சன்னா மற்றும் சோலே ஆகிய இரண்டு சொற்களும் கொண்டைக்கடலையைக் குறிக்கின்றன. இந்த சைவ இந்திய சுண்டல் கறியை ஒரு முக்கிய உணவாக அல்லது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.  வளர்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில் இருக்கும் புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கேப்சிகம் சென்னா மசாலாவை அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும் வாருங்கள் இந்த சுவையான கேப்சிகம் சென்னா மசாலாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
2.50 from 2 votes

கேப்சிகம் சன்னா மசாலா | Capsicum Channa Masala Recipe In Tamil

சன்னா மசாலா, மசாலாப் பொருட்களால் செய்யப்படும்ஒரு கறி உணவாகும். வட இந்தியாவில், சன்னா மசாலாவை ‘சோலே மசாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும்கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச்செய்து, இந்த சைவ சுண்டல் கறியை ஒரு முக்கிய உணவாக அல்லது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.  வளர்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில்இருக்கும் புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கேப்சிகம் சென்னா மசாலாவை அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: mumbai
Keyword: Capsicum Channa Masala
Yield: 4
Calories: 80kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சன்னா
  • 1 குடைமிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி தனியாத் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
  • 1/4 தேக்கரண்டி கசூரி மேத்தி
  • 1/4 தேக்கரண்டி ஆம்சூர் பவுடர்
  • 2 சிட்டிகை சாட் மசாலா
  • 2 பிரிஞ்சி இலை
  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சன்னாவை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி தக்காளி விழுது சேர்த்து சுருள வதக்கவும்.
     
  • இந்த கலவையுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கி விட்டு சாட் மசாலா தவிர்த்து எல்லா தூள் வகைகளையும் சேர்க்கவும்.
  • 5 நிமிடம் வதக்கி வேக வைத்த கடலையை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வைத்து 8 நிமிடம் வேக விடவும்.
  • (கடலையில் உப்பு சேர்த்து வேக வைத்திருப்பதால் குறைவாகவே சேர்க்கவும்) வரை திறந்து வைத்து வேக விடவும். சாட் மசாலா கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.

Nutrition

Serving: 500g | Calories: 80kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Fat: 2g | Saturated Fat: 1.2g | Sodium: 10mg | Potassium: 383mg | Fiber: 15g | Sugar: 2g | Iron: 2mg