மதிய உணவிற்கு ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த குடைமிளகாய் மசாலா சாதம் செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் சுவையான குடைமிளகாய் மசாலா சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். குடைமிளகாய் மசாலா சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள்.
அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த குடைமிளகாய் வைத்து சுவையான இந்த குடைமிளகாய் மசாலா சாதத்தை செய்து விட முடியும். என்ன குடைமிளகாய் சாதமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? ஆம் இந்த சாதம் செய்வதற்கு ரொம்பவே ஈசி. மற்றும் இந்த குடைமிளகாய் சாதம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். குறிப்பாக, உங்க வீட்டு குழந்தைகள் இந்த குடைமிளகாய் சாதத்தை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். ப்ரைட் ரைஸ் தோத்து போகும் அளவிற்கு குடைமிளகாய் சாதத்தின் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான குடைமிளகாய் பெப்பர் சாதம் ஒரு தரம் இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!