மதிய உணவிற்கு ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த குடைமிளகாய் மசாலா சாதம் செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

- Advertisement -

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் சுவையான குடைமிளகாய் மசாலா சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். குடைமிளகாய் மசாலா சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள்.

-விளம்பரம்-

அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த குடைமிளகாய் வைத்து சுவையான இந்த குடைமிளகாய் மசாலா சாதத்தை செய்து விட முடியும். என்ன குடைமிளகாய் சாதமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? ஆம் இந்த சாதம் செய்வதற்கு ரொம்பவே ஈசி. மற்றும் இந்த குடைமிளகாய் சாதம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். குறிப்பாக, உங்க வீட்டு குழந்தைகள் இந்த குடைமிளகாய் சாதத்தை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். ப்ரைட் ரைஸ் தோத்து போகும் அளவிற்கு குடைமிளகாய் சாதத்தின் சுவை அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -
Print
4 from 2 votes

குடைமிளகாய் மசாலா சாதம் | Capsicum Masala Sadam Recipe In Tamil

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் சுவையான குடைமிளகாய் மசாலா சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். குடைமிளகாய் மசாலா சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Capsicum Masala Sadam
Yield: 4 People
Calories: 193kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 குடைமிளகாய்
  • 2 கப் சாதம்
  • 3 பெரிய வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 4 வர ‌மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். அதன்பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து எண்ணையிலேயே மசாலா வாசனை போக வதக்கவும்.
  • பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும். பின் நெய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் மசாலா சாதம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 193kcal | Carbohydrates: 6.3g | Protein: 22g | Fat: 3.9g | Sodium: 97mg | Potassium: 258mg | Fiber: 3.1g | Vitamin A: 313IU | Vitamin C: 169mg | Calcium: 25mg | Iron: 7.3mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான குடைமிளகாய் பெப்பர் சாதம் ஒரு தரம் இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!