டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை என்று செய்து கொடுத்து போர் அடிக்குதா? வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் மாற்றாக வேறு ஏதேனும் சுவையாக செய்து தரும்படி கேட்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்க

By ·

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை என்று செய்து கொடுத்து போர் அடிக்குதா? வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் மாற்றாக வேறு ஏதேனும் சுவையாக செய்து தரும்படி கேட்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

இன்று நாம் லஞ்ச் பாக்சிற்கு கொடுத்து அனுப்பும் வகையில் வெரைட்டி ரைஸ் செய்ய உள்ளோம்.பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றால் தயிர் சாதம் ,தக்காளி சாதம், சாம்பார் சாதம்,காய்கறி சாதம் என்று தான் அதிகமாக செய்து கொடுத்து அனுப்புவோம். ஆனால் இன்று நாம் சூப்பரான சுவையில் கேப்ஸிகம் ரைஸ் செய்ய உள்ளோம்.

இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் குடைமிளகாய் சாதம் மிகவும் புதிதானது. அதிலும் குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. இதனை மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்திடலாம். மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள்,பச்சை சிவப்பு நிற கேப்ஸிகம்களை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும். கேப்ஸிகம் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகக்கு இந்த மாதிரி கலர் புஃள்ளாக செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை