டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

- Advertisement -

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை என்று செய்து கொடுத்து போர் அடிக்குதா? வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் மாற்றாக வேறு ஏதேனும் சுவையாக செய்து தரும்படி கேட்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

-விளம்பரம்-

இன்று நாம் லஞ்ச் பாக்சிற்கு கொடுத்து அனுப்பும் வகையில் வெரைட்டி ரைஸ் செய்ய உள்ளோம்.பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றால் தயிர் சாதம் ,தக்காளி சாதம், சாம்பார் சாதம்,காய்கறி சாதம் என்று தான் அதிகமாக செய்து கொடுத்து அனுப்புவோம். ஆனால் இன்று நாம் சூப்பரான சுவையில் கேப்ஸிகம் ரைஸ் செய்ய உள்ளோம்.

- Advertisement -

இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் குடைமிளகாய் சாதம் மிகவும் புதிதானது. அதிலும் குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. இதனை மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்திடலாம். மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள்,பச்சை சிவப்பு நிற கேப்ஸிகம்களை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும். கேப்ஸிகம் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகக்கு இந்த மாதிரி கலர் புஃள்ளாக செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

Print
3 from 3 votes

குடை மிளகாய் சாதம் | Capsicum Rice Recipe In Tamil

இன்றுநாம் லஞ்ச் பாக்சிற்கு கொடுத்து அனுப்பும் வகையில் வெரைட்டி ரைஸ் செய்ய உள்ளோம்.பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றால் தயிர் சாதம் ,தக்காளி சாதம், சாம்பார் சாதம்,காய்கறி சாதம் என்று தான் அதிகமாக செய்து கொடுத்து அனுப்புவோம். ஆனால் இன்று நாம் சூப்பரான சுவையில் கேப்ஸிகம் ரைஸ் செய்ய உள்ளோம். இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் குடைமிளகாய் சாதம் மிகவும் புதிதானது. அதிலும் குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. இதனை மிக குறைந்த நேரத்தில் செய்து முடித்திடலாம். மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள்,பச்சை சிவப்பு நிற கேப்ஸிகம்களை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: capsicum rice
Yield: 4
Calories: 158kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 கப் அரிசி
 • 1 பெரியது குடை மிளகாய்
 • 15 சின்ன வெங்காயம்
 • 1 தக்காளி
 • 1 1/2 டேபிள்ஸ்பூன் வேர்கடலை
 • உப்பு ருசிக்கேற்ப
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • கருவேப்பிலை சிறிது
 • கொத்தமல்லிதழை சிறிது

அரைக்க

 • 1 டீஸ்பூன் எண்ணெய்
 • 5 வரமிளகாய்
 • 1 பட்டை
 • 1 டேபிள்ஸ்பூன் தனியா
 • 1 டீஸ்பூன் சீரகம்
 • 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு
 • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
 • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்

தாளிக்க

 • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • 1/2 டீஸ்பூன் கடுகு
 • 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு
 • 1 டீஸ்பூன் கடலை பருப்பு

செய்முறை

 • முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் முதலியவற்றை நன்கு கழுவி நறுக்கி வைக்கவும்.
   
 • பின் அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து வேக வைத்து வடித்து வைக்கவும்.
 • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய், பட்டை,தனியா, சீரகம், தேங்காய்  சேர்த்துவறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
 • பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கி, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் அதில் வேர்க்கடலை, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும். நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
 • சிறிது நேரம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி வேக வைத்த சாதம் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
 • அவ்வளவுதான் சுவையான குடை மிளகாய் சாதம் ரெடி. இதற்கு தயிர் பச்சடி அல்லது வடகம் பொரித்து சேர்த்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 200g | Calories: 158kcal | Carbohydrates: 13.8g | Protein: 15g | Fat: 4.3g | Fiber: 1.1g