Advertisement
சைவம்

இட்லி தோசைக்கு மாவு இல்லையா ?உடனடியாக கேரட் தோசைக்கு மாவு சில மணி நேரங்களில் இப்படி செய்யுங்கள்!

Advertisement

இப்போதெல்லாம் குழந்தைகள் சாப்பிடும் உணவு கண்களுக்கு பிடித்த நிறத்தில் பார்ப்பதற்கு கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று விருமுகிறார்கள். அவ்வகையில் எப்ப பாத்தாலும் இட்லி, தோசை என்று பழைய உணவு வகைகளை சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கு. கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஆரோக்கியமான கேரட் தோசை செய்து கொடுங்கள்.  காலை, இரவு உணவை இனிதாக்க இந்த ஆரோக்கியம் மிகுந்த கேரட் தோசை நீங்களும் ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள்!

எப்போதும் உளுந்து மாவு தோசையை சாப்பிட்டு போர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக கேரட் தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. கேரட்டில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்உங்கள் வீட்டில் கேரட் இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த தோசையை செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த கேரட் தோசை செய்து பாருங்களேன்

Advertisement

கேரட் தோசை | Carrot Dosa Recipe In Tamil

Print Recipe
எப்போதும் உளுந்து மாவு தோசையை சாப்பிட்டுபோர் அடிக்குதா. கொஞ்சம்
Advertisement
இப்படி வித்தியாசமாக கேரட் தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே.கேரட்டில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்,கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளைஉறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்உங்கள் வீட்டில் கேரட் இருந்தால் சட்டுனுபத்து நிமிடத்தில் இந்த தோசையை செய்து அசத்தலாம். குழந்தைகள்
Advertisement
முதல் பெரியவர்கள் வரைஇதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த கேரட் தோசை செய்து பாருங்களேன்
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Carrot Dosai
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 55

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் இட்லி அரிசி
  • 3/4 கப் துருவிய கேரட்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1 கொத்து  கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கு
  • 1 டீஸ்பூன் கடுகு

Instructions

  •  
    இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • இத்துடன் கேரட், சீரகம், மிளகு காய்ந்தமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
     
  • தோசைமாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள்.கடுகு தாளித்து மாவுடன் கலக்கவும்.
  • தோசைக்கல் காய்ந்ததும் மாவை லேசான தோசைகளாக வார்த்து சிறிது எண்ணெய் விட்டு தோசையை மூடி வைத்து சுடவும்
  • ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான கேரட் தோசை தயார்..

Nutrition

Serving: 2nos | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago