இட்லி தோசைக்கு மாவு இல்லையா ?உடனடியாக கேரட் தோசைக்கு மாவு சில மணி நேரங்களில் இப்படி செய்யுங்கள்!

- Advertisement -

இப்போதெல்லாம் குழந்தைகள் சாப்பிடும் உணவு கண்களுக்கு பிடித்த நிறத்தில் பார்ப்பதற்கு கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று விருமுகிறார்கள். அவ்வகையில் எப்ப பாத்தாலும் இட்லி, தோசை என்று பழைய உணவு வகைகளை சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கு. கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஆரோக்கியமான கேரட் தோசை செய்து கொடுங்கள்.  காலை, இரவு உணவை இனிதாக்க இந்த ஆரோக்கியம் மிகுந்த கேரட் தோசை நீங்களும் ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள்!

-விளம்பரம்-

எப்போதும் உளுந்து மாவு தோசையை சாப்பிட்டு போர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக கேரட் தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. கேரட்டில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்உங்கள் வீட்டில் கேரட் இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த தோசையை செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த கேரட் தோசை செய்து பாருங்களேன்

- Advertisement -
Print
3.86 from 7 votes

கேரட் தோசை | Carrot Dosa Recipe In Tamil

எப்போதும் உளுந்து மாவு தோசையை சாப்பிட்டுபோர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக கேரட் தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே.கேரட்டில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்,கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளைஉறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்உங்கள் வீட்டில் கேரட் இருந்தால் சட்டுனுபத்து நிமிடத்தில் இந்த தோசையை செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஇதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த கேரட் தோசை செய்து பாருங்களேன்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Carrot Dosai
Yield: 4
Calories: 55kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் இட்லி அரிசி
  • 3/4 கப் துருவிய கேரட்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1 கொத்து  கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கு
  • 1 டீஸ்பூன் கடுகு

செய்முறை

  •  
    இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • இத்துடன் கேரட், சீரகம், மிளகு காய்ந்தமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
     
  • தோசைமாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள்.கடுகு தாளித்து மாவுடன் கலக்கவும்.
  • தோசைக்கல் காய்ந்ததும் மாவை லேசான தோசைகளாக வார்த்து சிறிது எண்ணெய் விட்டு தோசையை மூடி வைத்து சுடவும்
  • ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான கேரட் தோசை தயார்..

Nutrition

Serving: 2nos | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g