Advertisement
சைவம்

இனி கேரட் கூட்டு இப்படி செய்து பாருங்கள்! கேரட் சாப்பிடுதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட்  வைத்து நிறைய விததமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

இதுவரை கேரட்டை வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த கேரட் , பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும் தெரியுமா? வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

கேரட் கூட்டு | Carrot Kootu Recipe In Tamil

Print Recipe
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட்  வைத்து நிறைய விததமான பதார்த்தங்களை சமைத்திருப்போம்.கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்றமினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண்பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளைஉறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Carrot Kootu
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 61

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கேரட் பொடியாக நறுக்கியது
  • 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு

  • 2 டீஸ்பூன் துருவிய தேங்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்

தாளிப்பதற்கு

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 பச்சை மிளகாய்

Instructions

  • முதலில் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
    Advertisement
  • பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள்சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின்பு மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
  • பின் அதில்தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி,பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவேண்டும்.
  •  
    கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கினால், கேரட் ரெடி

Nutrition

Serving: 100g | Calories: 61kcal | Carbohydrates: 7g | Protein: 1.2g | Fat: 0.5g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 1.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

1 மணி நேரம் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

3 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

4 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

5 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

7 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

8 மணி நேரங்கள் ago