உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் வைத்து நிறைய விததமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
-விளம்பரம்-
இதுவரை கேரட்டை வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த கேரட் , பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும் தெரியுமா? வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கேரட் கூட்டு | Carrot Kootu Recipe In Tamil
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் வைத்து நிறைய விததமான பதார்த்தங்களை சமைத்திருப்போம்.கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்றமினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண்பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளைஉறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
Yield: 4
Calories: 61kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கேரட் பொடியாக நறுக்கியது
- 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
அரைப்பதற்கு
- 2 டீஸ்பூன் துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் சீரகம்
தாளிப்பதற்கு
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
- கறிவேப்பிலை சிறிது
- 1 பச்சை மிளகாய்
செய்முறை
- முதலில் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள்சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
- பின்பு மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
- பின் அதில்தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி,பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவேண்டும்.
- கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கினால், கேரட் ரெடி
Nutrition
Serving: 100g | Calories: 61kcal | Carbohydrates: 7g | Protein: 1.2g | Fat: 0.5g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 1.2mg