Advertisement
Uncategorized

பாரம்பரிய சுவையில் முந்திரி வட்டலாப்பம்! இதை சுலபமாக வீட்டிலே செய்து விடலாம்!

Advertisement

வட்டலாப்பம் என்பது தேங்காய் பால் அல்லது பால், முந்திரி, முட்டை, ஏலக்காய், பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சுவையான உணவு.. , முந்திரி வட்டலாப்பம் பாரம்பரியமாக அதை ஆவியில் வேகவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. எவ்வளவு நாள் தான் சுவையான திண்பண்டத்தை கடையில் சென்று வாங்குவது. நம் வீட்டில் இருப்பவர்களுக்கு மிக மிக சுலபமான முறையில் அருமையான முந்திரி வட்டலாப்பம் எப்படி செய்து கொடுப்பது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்..

  முட்டைகள், பால் சேர்ந்த கலவையை கொண்டும் இந்த முந்திரி வட்டலாப்பம் செய்யலாம். ஓவன் கூட தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரத்தில் வைத்து, நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்தவுடன் அப்படியே வெண்ணைப் போல கரையும் இந்த கேக்கை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க. ட்ரை பண்ணி பாருங்க. சரி, சுவையான சூப்பரான அந்த கேக் எப்படி செய்யறது பார்க்கலாம் வாங்க!,

Advertisement

முந்திரி வட்டலாப்பம் | Cashew Vattalapaam Reipe In Tamil

Print Recipe
வட்டலாப்பம் என்பது தேங்காய்பால் அல்லது பால், முந்திரி, முட்டை, ஏலக்காய், பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சுவையான உணவு..,
Advertisement
முந்திரி வட்டலாப்பம் பாரம்பரியமாக அதை ஆவியில் வேகவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.எவ்வளவு நாள் தான் சுவையான திண்பண்டத்தை கடையில் சென்று வாங்குவது. நம் வீட்டில் இருப்பவர்களுக்குமிக மிக சுலபமான முறையில் அருமையான முந்திரி வட்டலாப்பம் எப்படி செய்து கொடுப்பது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.. முட்டைகள் சேர்ந்தகலவையை கொண்டும் இந்த முந்திரி வட்டலாப்பம் செய்யலாம்.
Advertisement
Course snacks
Cuisine srilankan
Keyword Cashew Vattalappam
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 267

Equipment

  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 8 முட்டை
  • 2 கைப்பிடி முந்திரி
  • 1 டம்ளர் சர்க்கரை
  • 1 டம்ளர் பால்
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு சிறிதளவு

Instructions

  • முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளாவும்.
  • மிக்சியில் முந்திரியை போட்டு பொடியாக்கவும். பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு நிமிடம் அடிக்கவும். பின் சர்க்கரை, உப்பு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் அடிக்கவும். அதன் பின்னர் பாலை ஊற்றி இரண்டு நிமிடம் அடிக்கவும்.
  • மிக்ஸியில் அடுத்தவற்றை வடிகட்டி ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
  • அந்த சில்வர் பாத்திரத்தை மூடி வைக்கவும். தண்ணீர் உள்ளே சொட்டாமல் இருக்க மூடியை ஒரு துணியை கொண்டு கட்டவும்.
  • பின் அந்த பாத்திரத்தை இட்லி பானையில் வைத்து இருபது நிமிடம் வேக வைத்து எடுத்தால் முந்திரி வட்டலாப்பம் ரெடி
  • இஞ்சி சேர்ப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Nutrition

Serving: 1cup | Calories: 267kcal | Carbohydrates: 33g | Protein: 7g | Fat: 12g
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

7 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

8 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

8 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

10 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

12 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

13 மணி நேரங்கள் ago