பாரம்பரிய சுவையில் முந்திரி வட்டலாப்பம்! இதை சுலபமாக வீட்டிலே செய்து விடலாம்!

- Advertisement -

வட்டலாப்பம் என்பது தேங்காய் பால் அல்லது பால், முந்திரி, முட்டை, ஏலக்காய், பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சுவையான உணவு.. , முந்திரி வட்டலாப்பம் பாரம்பரியமாக அதை ஆவியில் வேகவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. எவ்வளவு நாள் தான் சுவையான திண்பண்டத்தை கடையில் சென்று வாங்குவது. நம் வீட்டில் இருப்பவர்களுக்கு மிக மிக சுலபமான முறையில் அருமையான முந்திரி வட்டலாப்பம் எப்படி செய்து கொடுப்பது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்..

-விளம்பரம்-

  முட்டைகள், பால் சேர்ந்த கலவையை கொண்டும் இந்த முந்திரி வட்டலாப்பம் செய்யலாம். ஓவன் கூட தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரத்தில் வைத்து, நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்தவுடன் அப்படியே வெண்ணைப் போல கரையும் இந்த கேக்கை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க. ட்ரை பண்ணி பாருங்க. சரி, சுவையான சூப்பரான அந்த கேக் எப்படி செய்யறது பார்க்கலாம் வாங்க!,

- Advertisement -
Print
No ratings yet

முந்திரி வட்டலாப்பம் | Cashew Vattalapaam Reipe In Tamil

வட்டலாப்பம் என்பது தேங்காய்பால் அல்லது பால், முந்திரி, முட்டை, ஏலக்காய், பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சுவையான உணவு.., முந்திரி வட்டலாப்பம் பாரம்பரியமாக அதை ஆவியில் வேகவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.எவ்வளவு நாள் தான் சுவையான திண்பண்டத்தை கடையில் சென்று வாங்குவது. நம் வீட்டில் இருப்பவர்களுக்குமிக மிக சுலபமான முறையில் அருமையான முந்திரி வட்டலாப்பம் எப்படி செய்து கொடுப்பது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.. முட்டைகள் சேர்ந்தகலவையை கொண்டும் இந்த முந்திரி வட்டலாப்பம் செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: snacks
Cuisine: srilankan
Keyword: Cashew Vattalappam
Yield: 4
Calories: 267kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 8 முட்டை
  • 2 கைப்பிடி முந்திரி
  • 1 டம்ளர் சர்க்கரை
  • 1 டம்ளர் பால்
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு சிறிதளவு

செய்முறை

  • முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளாவும்.
  • மிக்சியில் முந்திரியை போட்டு பொடியாக்கவும். பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு நிமிடம் அடிக்கவும். பின் சர்க்கரை, உப்பு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் அடிக்கவும். அதன் பின்னர் பாலை ஊற்றி இரண்டு நிமிடம் அடிக்கவும்.
  • மிக்ஸியில் அடுத்தவற்றை வடிகட்டி ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
  • அந்த சில்வர் பாத்திரத்தை மூடி வைக்கவும். தண்ணீர் உள்ளே சொட்டாமல் இருக்க மூடியை ஒரு துணியை கொண்டு கட்டவும்.
  • பின் அந்த பாத்திரத்தை இட்லி பானையில் வைத்து இருபது நிமிடம் வேக வைத்து எடுத்தால் முந்திரி வட்டலாப்பம் ரெடி
  • இஞ்சி சேர்ப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Nutrition

Serving: 1cup | Calories: 267kcal | Carbohydrates: 33g | Protein: 7g | Fat: 12g