Advertisement
சைவம்

உடல் எடையை வேகமாக குறைக்கும் காலிஃபிளவர் பொரியல் செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க குறைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமலும் அதே நேரம் வயிறு பசியும் அடங்கும் படியாக சில உணவுகள் உள்ளது. ஆம், காலிஃப்ளவர் பொரியல் செய்து சாப்பிடும் பொழுது நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் அதனால் உங்கள் எடை கூடாது ஏனென்றால் அதில் குறைந்த அளவு கலோரிகளை இருக்கும்.

இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

இப்படி நீங்கள் உணவுகளை தேர்ந்தெடுத்து குறைவான கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடும் போது தான் மிக எளிதாக உங்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம். இன்று உடல் எடையை குறைக்கும் குறைந்த கலோரிகள் கொண்ட காலிஃபிளவர் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

காலிஃபிளவர் பொரியல் | Cauliflower Poriyal Recipe in Tamil

Print Recipe
காலிஃப்ளவர் பொரியல் செய்து சாப்பிடும் பொழுது நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் அதனால் உங்கள் எடை கூடாது ஏனென்றால் அதில் குறைந்த அளவு கலோரிகளை இருக்கும். இப்படி நீங்கள் உணவுகளை தேர்ந்தெடுத்து குறைவான கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடும் போது தான் மிக எளிதாக உங்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம். இன்று உடல் எடையை குறைக்கும் குறைந்த கலோரிகள் கொண்ட காலிஃபிளவர் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course poriyal
Cuisine Indian, TAMIL
Keyword Cauliflower poriyal, காலிஃபிளவர் பொரியல்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 25

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1  பூ காலிஃபிளவர்
  • 1 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 குடை மிளகாய் நறுக்கியது
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp சாம்பார் மசாலா
  • 1 tbsp கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • புதினா இலை சிறிது

Instructions

  • முதலில் ஒரு காலிஃபிளவர் பூ முழுவதையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கடாயில் போட்டு இருமுறை தண்ணீர் வைத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுபில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் கடுகு, சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதன்பின் கடுகு நன்கு பொரிந்து வந்ததும் அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை
    Advertisement
    மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயங்களையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  • வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள், இஞ்சி பூண்டு விழுது பச்சை வானை போகி வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதனுடன் ஒரு குடை மிளகாய்யை சேர்த்து கொள்ளவும்.
  • அதன் பின் நாம் கழுவி வைத்திருக்கும் காலிஃபிளவர் பூவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள் தூள், சாம்பார் மசாலா பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • பின் சிறிதாக நறுக்கிய புதினா இலைகளையும் இதனுடன் சேர்த்து காலிஃபிளவர் நனாகு வேகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கடாயை கீழே இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் காலிஃபிளவர் பொரியல் தயார் இதை சப்பாத்தியுடன் சாப்பிடும்போது உங்கள் உடல் எடை சட்டனே குறைய ஆரம்பித்து விடும்.

Nutrition

Calories: 25kcal | Carbohydrates: 5g | Protein: 1.9g | Fat: 0.3g | Saturated Fat: 0.1g | Sodium: 30mg | Potassium: 299mg | Fiber: 2g | Sugar: 1.9g

English Overview: Cauliflower poriyal is one of the most important dishes in south india. cauliflower poriyal recipe or cauliflower poriyal seivathu eppadi or cauliflower poriyal recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

27 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

3 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

12 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

14 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

15 மணி நேரங்கள் ago