பிக் பாஸ்ல சண்டை வருவதற்கு காரணமா இருந்த சிம்பிளான சம்மந்தி எப்படி செய்யறதுன்னு பாருங்க!

இப்போ ரீசண்டா நடந்த பிக் பாஸ் எபிசோட்ல சம்மந்திக்காக பயங்கரமான சண்டை நடந்துச்சு ஆனா இந்த சிம்பிளான சம்மந்தி கா இவ்வளவு சண்டை அப்படின்னு உங்களுக்கு தெரியணும்னா இந்த சம்மந்தி செய்றது எவ்வளவு ஈஸி அப்படின்றது உங்களுக்கு தெரியணும். இந்த சம்மந்தில அப்படி என்னடா இருக்கு அதுக்கு எதுக்குட

By Prem Kumar · 22/10/2024

இப்போ ரீசண்டா நடந்த பிக் பாஸ் எபிசோட்ல சம்மந்திக்காக பயங்கரமான சண்டை நடந்துச்சு ஆனா இந்த சிம்பிளான சம்மந்தி கா இவ்வளவு சண்டை அப்படின்னு உங்களுக்கு தெரியணும்னா இந்த சம்மந்தி செய்றது எவ்வளவு ஈஸி அப்படின்றது உங்களுக்கு தெரியணும். இந்த சம்மந்தில அப்படி என்னடா இருக்கு அதுக்கு எதுக்குடா இவ்வளவு சண்டை போடுறீங்க அப்படின்னு இந்த வாரம் எபிசோடு பார்த்தவங்க கண்டிப்பா யோசிச்சு இருப்பீங்க. இந்த சம்மந்தி செய்யறது ரொம்ப ரொம்ப சிம்பிள் ஒரு நாலஞ்சு பொருள் இருந்தா போதும் இத சிம்பிளா சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம்.

சின்ன வெங்காயம் உரிக்கிறதுக்கு மட்டும் தான் நமக்கு டைம் வேணும் மத்தபடி இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். இந்த சம்மந்தி செய்றதுக்கு நமக்கு வெங்காயம் வெள்ளைப்பூண்டு கருவேப்பிலை மிளகாய் தூள் உப்பு எண்ணெய் இருந்தால் போதும். பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம் ரொம்ப ரொம்ப ஈஸி தான். சுட சுட இந்த சம்மந்தி செஞ்சு சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் அப்படின்னா சுவை அட்டகாசமா இருக்கும். ஒரு சில நேரத்துல குழம்பு ரசம் பொரியல் அப்படின்னு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஈஸியா சிம்பிளா ஒரு ரெசிபி செஞ்சு அதை சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம்.

அதுக்கு சிம்பிளா நம்ம அப்பளம் பொரிச்சிக்கிட்டாலே போதுமானது அதுவே சுவை கூடுதலாக இருக்கும். அந்த வகையில இந்த சூப்பர் டேஸ்டான சம்மந்தி உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க நல்லா காரசாரமா வேணும் அப்படின்னா உங்க தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்துக்கோங்க குழந்தைகளுக்கு கொடுக்க போறதா இருந்தா கொஞ்சம் மிளகாய் தூள் கம்மியா சேர்த்துக்கோங்க.

இந்தச் சம்மந்திய சுடு சாதத்துக்கு மட்டுமில்லாம பழைய சாதத்துக்கும் சைடிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்திக்கும் கூட இது சூப்பரான சைடு டிஷ்ஷாவே இருக்கும். இந்த சூப்பரான சம்மந்திய உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா எல்லாருக்கும் கொடுத்துட்டு சாப்பிடுங்க அப்படி இல்லன்னா உங்க வீட்லயும் பிக் பாஸ் மாதிரி சண்டை வந்தாலும் வரலாம் இப்ப வாங்க இந்த சுவையான சம்மந்தி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் தக்காளி மோர் கறி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full