நம்ம எல்லாருமே மோர் குழம்பு வச்சு சாப்பிட்டிருப்போம் ஆனால் இது என்ன தக்காளி மோர் கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா. ரொம்ப ரொம்ப சிம்பிளா வீட்ல இருக்கிற ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த தக்காளி மோர் கறி. வீட்ல குழம்பு வைக்க முடியல அப்படின்ற சூழ்நிலையில தயிர் ஊத்தி சாப்பிடுவதற்கு பதிலா ரொம்பவே சிம்பிளா சட்டுனு இந்த தக்காளி மோர் கறி செஞ்சிடலாம். சாதத்துக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு கூட லஞ்சுக்கு இதை கொடுத்து விடலாம் காலைல லேட்டா எழுந்துட்டீங்கன்னா கவலைப்படாதீங்க இந்த ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த தக்காளி மோர் கறி கேரளால ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட சட்டுனு இதை செஞ்சு கொடுக்கலாம். ரொம்ப சிம்பிளான ரெசிபியா இருக்கேன்னு யோசிக்க வேணாம் இது கூட கொஞ்சம் அப்பளம் பொரிச்சு கொடுத்தா போதும் சூப்பரா சாப்பிட்டு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சிம்பிளான அட்டகாசமான தக்காளி மோர் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தக்காளி மோர் கறி | Tomato Mor Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் தயிர்
- 2 தக்காளி
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- 3 வர மிளகாய்
- தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சீரகம் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு தக்காளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கலந்ததும் தேவையான அளவு உப்பு தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்தால் சுவையான தக்காளி ஒரு கறி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!