ருசியான சென்னா பெப்பர் மசாலா இனி இப்படி செஞ்சி பாருங்க!

சென்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. சென்னா மசாலா வெள்ளை கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மற்றும் கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்

By Prem Kumar · 4/3/2024

சென்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. சென்னா மசாலா வெள்ளை கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மற்றும் கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை மேலும் ஆரோக்கியமாக விரும்பினால் முளைகட்டிய கொண்டைக்கடலையை பயன்படுத்திக் கொள்ளலாம். கொண்டைக்கடலை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அதனால்தான் கொண்டைக்கடலையை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் நல்லது என கூறுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு ஆரோக்கியமான கொண்டைக்கடலையை வைத்து சென்னா பெப்பர் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த சென்னா பெப்பர் மசாலா ஹோட்டல் சுவையில் இருப்பதால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். மேலும் இந்த சென்னா பெப்பர் மசாலாவை செய்வது மிகவும் ஈஸி.

இதனையும் படியுங்கள் : கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

Recipes AMP · Quick view
View full