இந்த மார்கழி குளிருக்கு இதமான சூடா செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் ஒரு முறை இப்படி செய்து அசத்துங்கள்!

- Advertisement -

சூப் வகைகள் என்னதான் ஏராளமாக இருந்தாலும் ஆட்டுக்கால் சூப் என்றால் அது கொஞ்சம் ஸ்பெஷல்தான். நாம் சிக்கன் சூப் மட்டன் சூப், மஸ்ரூம் சூப், வெஜிடபிள் சூப் , கீரை சூப் , நண்டு சூப், வாழைத்தண்டு சூப், அப்படின்னு நிறைய சூப் குடிச்சிருந்தாலும் ஆட்டுக்கால் சூப் ரொம்பவே ருசியாகவும் தனியாவும் இருக்கும்.

-விளம்பரம்-

காரணம் என்னன்னா ஆட்டுக்கால் சூப்ல ஏராளமான நன்மைகள் இருக்கு. கை வலி கால் வலி உடம்பு வலி முதுகு வலி முட்டி வலி என அனைத்திற்கும் ஒரு சிறந்த மருந்தாக இந்த ஆட்டுக்கால் சூப் இருக்கும். பொதுவாக இந்த ஆட்டுக்கால் சூப்பை பெரியவர்கள் விரும்பி குடிப்பார்கள். ஆனால் குழந்தைகள் அவ்வளவு விரும்பி குடிக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி நாம் சூப் செய்து கொடுத்தால் சிறு வயதிலிருந்தே ஆட்டுக்கால் சூப் குடிக்க பழகிக் கொள்வார்கள்.

- Advertisement -

அதனால் அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுத்து குடிக்க பழக்குங்கள். சமையல்களில் செட்டிநாடு சமையல் என்றால் ஒரு தனித்துவமான ருசி இருக்கும். அந்த வகையில் நாம் இன்று செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்கால் சூப் எப்படி வைப்பது என்று பார்க்கப் போகிறோம். ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து இருந்தால் மட்டும் போதும் நொடியில் இந்த சூப்பை நாம் வைத்துவிடலாம் சுவையும் மிகவும் ருசியாகவும் நாம் எதிர்பார்க்காத வகையிலும் அட்டகாசமாகவும் இருக்கும். இந்த சுவையான செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
2 from 1 vote

செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் | Chettinad Aatukal Soup

சிறு வயதிலிருந்தே ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுத்து குடிக்க பழக்குங்கள். சமையல்களில் செட்டிநாடு சமையல் என்றால் ஒரு தனித்துவமான ருசி இருக்கும். அந்த வகையில் நாம் இன்று செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்கால் சூப் எப்படி வைப்பது என்று பார்க்கப் போகிறோம். ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து இருந்தால் மட்டும் போதும் நொடியில் இந்த சூப்பை நாம் வைத்துவிடலாம் சுவையும் மிகவும் ருசியாகவும் நாம் எதிர்பார்க்காத வகையிலும் அட்டகாசமாகவும் இருக்கும். இந்த சுவையான செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Appetizer
Cuisine: tamil nadu
Keyword: Chettinadu Aatukal Soup
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 குக்கர்
  • பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 ஆட்டுக்கால்
  • 3 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் தனியா
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 6 பூண்டு பற்கள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லிஇலைகள்

செய்முறை

  • முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் மிளகு சீரகம் மற்றும் தனியா சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்ததை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் ஆட்டுக்கால்களை சேர்த்து அதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் 4  நறுக்கிய சின்ன வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • இப்பொழுது குக்கரில் ஆவி அடங்கியவுடன் தாளித்ததை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலைகளும் தூவி இறக்கினால் சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 13g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg