Advertisement
அசைவம்

இந்த மார்கழி குளிருக்கு இதமான சூடா செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் ஒரு முறை இப்படி செய்து அசத்துங்கள்!

Advertisement

சூப் வகைகள் என்னதான் ஏராளமாக இருந்தாலும் ஆட்டுக்கால் சூப் என்றால் அது கொஞ்சம் ஸ்பெஷல்தான். நாம் சிக்கன் சூப் மட்டன் சூப், மஸ்ரூம் சூப், வெஜிடபிள் சூப் , கீரை சூப் , நண்டு சூப், வாழைத்தண்டு சூப், அப்படின்னு நிறைய சூப் குடிச்சிருந்தாலும் ஆட்டுக்கால் சூப் ரொம்பவே ருசியாகவும் தனியாவும் இருக்கும்.

காரணம் என்னன்னா ஆட்டுக்கால் சூப்ல ஏராளமான நன்மைகள் இருக்கு. கை வலி கால் வலி உடம்பு வலி முதுகு வலி முட்டி வலி என அனைத்திற்கும் ஒரு சிறந்த மருந்தாக இந்த ஆட்டுக்கால் சூப் இருக்கும். பொதுவாக இந்த ஆட்டுக்கால் சூப்பை பெரியவர்கள் விரும்பி குடிப்பார்கள். ஆனால் குழந்தைகள் அவ்வளவு விரும்பி குடிக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி நாம் சூப் செய்து கொடுத்தால் சிறு வயதிலிருந்தே ஆட்டுக்கால் சூப் குடிக்க பழகிக் கொள்வார்கள்.

Advertisement

அதனால் அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுத்து குடிக்க பழக்குங்கள். சமையல்களில் செட்டிநாடு சமையல் என்றால் ஒரு தனித்துவமான ருசி இருக்கும். அந்த வகையில் நாம் இன்று செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்கால் சூப் எப்படி வைப்பது என்று பார்க்கப் போகிறோம். ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து இருந்தால் மட்டும் போதும் நொடியில் இந்த சூப்பை நாம் வைத்துவிடலாம் சுவையும் மிகவும் ருசியாகவும் நாம் எதிர்பார்க்காத வகையிலும் அட்டகாசமாகவும் இருக்கும். இந்த சுவையான செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் | Chettinad Aatukal Soup

Print Recipe
சிறு வயதிலிருந்தே ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுத்து
Advertisement
குடிக்க பழக்குங்கள். சமையல்களில் செட்டிநாடு சமையல் என்றால் ஒரு தனித்துவமான ருசி இருக்கும். அந்த வகையில் நாம் இன்று செட்டிநாடு ஸ்டைலில் ஆட்டுக்கால் சூப் எப்படி வைப்பது என்று பார்க்கப் போகிறோம். ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து இருந்தால் மட்டும் போதும் நொடியில் இந்த சூப்பை நாம் வைத்துவிடலாம் சுவையும் மிகவும் ருசியாகவும் நாம் எதிர்பார்க்காத வகையிலும் அட்டகாசமாகவும் இருக்கும். இந்த சுவையான செட்டிநாடு ஆட்டுக்கால் சூப் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Advertisement
Course Appetizer
Cuisine tamil nadu
Keyword Chettinadu Aatukal Soup
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 245

Equipment

  • 1 குக்கர்
  • பெரிய பவுள்

Ingredients

  • 4 ஆட்டுக்கால்
  • 3 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் தனியா
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 6 பூண்டு பற்கள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லிஇலைகள்

Instructions

  • முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் மிளகு சீரகம் மற்றும் தனியா சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்ததை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் ஆட்டுக்கால்களை சேர்த்து அதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் 4  நறுக்கிய சின்ன வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • இப்பொழுது குக்கரில் ஆவி அடங்கியவுடன் தாளித்ததை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலைகளும் தூவி இறக்கினால் சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 13g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

55 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

57 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

4 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago