Advertisement
அசைவம்

காரசாரமான செட்டிநாடு சிக்கன் சூப் செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் காரசாரமான செட்டிநாடு சிக்கன் சூப் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சலால் உடம்பு சரியில்லாத போதும் தொண்டை சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் பொழுது இது போன்ற இந்த செட்டிநாடு சிக்கன் சூப் செய்து கொடுத்தால் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சூப் குடிக்க விருப்பப்படும் பொழுது இந்த செட்டிநாடு சிக்கன் சூப் செய்து கொடுத்தால்.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் செய்வது எப்படி ?

Advertisement

அவர்கள் விரும்பி குடிக்கும் வகையில் காரசாரமாக அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் சூப் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் இந்த சூப் இருக்கும். ஆகையால் இன்று இந்த செட்டிநாடு சிக்கன் சூப் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

செட்டிநாடு சிக்கன் சூப் | Chettinad Chicken Soup Recipe in Tamil

Print Recipe
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சூப் குடிக்க விருப்பப்படும் பொழுது இந்த செட்டிநாடு சிக்கன் சூப் செய்து கொடுத்தால். அவர்கள் விரும்பி குடிக்கும் வகையில் காரசாரமாக அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் சூப் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் இந்த சூப் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Chicken soup, சிக்கன் சூப்
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 351

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Ingredients

  • ½ KG சிக்கன் எலும்புடன்
  • 10 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 1 லவங்கம்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு துண்டு பட்டை மற்றும் ஒரு லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
    Advertisement
  • அதன் பின் இதுனடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு மசிந்து வெந்து வரும் வரை வதக்கி கடாயை கீழே இறக்கி விடுங்கள்.
  • பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் வதக்கிய பொருட்களை சேர்தது பின் இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் மசாலா வாசனை போனவுடன் சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆறு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  • பின்பு ஆறு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி சூப்பில் சிறிதளவு எலும்பிச்சை சாறு பிழிந்து சாப்பிட பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு சிக்கன் சூப் தயாராகி விட்டது

Nutrition

Serving: 700gram | Calories: 351kcal | Carbohydrates: 2g | Protein: 9g | Fat: 1g | Saturated Fat: 0.1g | Cholesterol: 10mg | Sodium: 3mg | Potassium: 537mg | Fiber: 1g | Sugar: 0.5g | Calcium: 1.6mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

54 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஏப்ரல் 2024!

மேஷம் முதலீடு பெரும்பாலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.…

3 மணி நேரங்கள் ago

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

13 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

14 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

16 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

19 மணி நேரங்கள் ago