- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று நாம் காரசாரமான செட்டிநாடு சிக்கன் சூப் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சலால் உடம்பு சரியில்லாத போதும் தொண்டை சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் பொழுது இது போன்ற இந்த செட்டிநாடு சிக்கன் சூப் செய்து கொடுத்தால் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சூப் குடிக்க விருப்பப்படும் பொழுது இந்த செட்டிநாடு சிக்கன் சூப் செய்து கொடுத்தால்.
இதையும் படியுங்கள் : கமகமக்கும் ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் செய்வது எப்படி ?
அவர்கள் விரும்பி குடிக்கும் வகையில் காரசாரமாக அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் சூப் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் இந்த சூப் இருக்கும். ஆகையால் இன்று இந்த செட்டிநாடு சிக்கன் சூப் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு துண்டு பட்டை மற்றும் ஒரு லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின் இதுனடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு மசிந்து வெந்து வரும் வரை வதக்கி கடாயை கீழே இறக்கி விடுங்கள்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் வதக்கிய பொருட்களை சேர்தது பின் இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்கவும்.
பின் மசாலா வாசனை போனவுடன் சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆறு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்பு ஆறு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி சூப்பில் சிறிதளவு எலும்பிச்சை சாறு பிழிந்து சாப்பிட பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு சிக்கன் சூப் தயாராகி விட்டது






