வீடே மணக்க மணக்க செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு இப்படி ஒரு முறை வைத்து பாருங்கள்!!
மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும். மீன் குழம்பு மட்டும் ரெண்டு மூணு நாள் வைத்து சா
மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும். மீன் குழம்பு மட்டும் ரெண்டு மூணு நாள் வைத்து சாப்பிடலாம். மீன் குழம்பு அன்னைக்கு சாப்பிடுவதை விட ரெண்டு நாள் வச்சு சாப்பிடும் போது சொல்ல முடியாத அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். அந்த அளவுக்கு டேஸ்ட்டான மீன் குழம்பு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வைப்பாங்க.
இந்த மீன் குழம்பை வெவ்வேறு பகுதிகளில் அவரவர் உணவு முறைக்கு ஏற்ப வெவ்வேறு மசாலாக்கள் மற்றும் அங்கு கிடைக்கும் மீன் வகைகளை கொண்டு செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று செட்டிநாடு ஸ்டைலில் மீன் குழம்பு எப்படி வீட்டிலேயே சுவையாக எப்படி வைப்பது என்று பார்ப்போம். செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். அதிலும் குறிப்பாக செட்டிநாடு சிக்கன், செட்டிநாடு மட்டன் போன்ற உணவுகள் தமிழக அளவில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகள் ஆகும். அந்த வரிசையில் இன்று நாம் செட்டிநாடு முறையில் சுவையான மீன் குழம்பை தான் செய்ய உள்ளோம்.
இந்த மீன் குழம்பானது வழக்கமாக செய்கின்ற வகையில் இருந்து சற்று மாற்றாக இருக்கும். இதனை செய்யும் போதே வீடு முழுவதும் கம கம என்ற வாசனை வரும். இந்த மீன் குழம்பினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் விதத்தில் சுவை மிக பிரமாதமாக இருக்கும். இதனை சாதம், இட்லி, தோசை என்று அனைத்திற்கும் அருமையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பழைய சாதத்துக்கு இந்த மீன் குழம்பு வைத்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இப்போது சுவையான செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!