மீன் ஆம்லேட் கேக்குறதுக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா. ஆனா ஒரு தடவை செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த மீன் ஆம்லேட் செய்யறதுக்கு நமக்கு வீட்ல வச்ச மீன் குழம்பும் அதுல இருக்கிற ஒரு மீன் துண்டும் போதுமானது. மீன் குழம்பு தனியா சாப்பிட்டாலும் ஆம்லெட் தனியா சாப்பிட்டாலும் சளி இருமல் எல்லாமே வெளியே வந்துடும். ஆனா இப்போ இந்த மீன் குழம்பு ஊத்தி செய்ய போற ஆம்லெட் ரொம்ப ரொம்ப சூப்பரான ஒரு சளி மருந்தாக இருக்கும். அப்படியே சளி எல்லாமே வெளிய வந்துடும். ரொம்ப டேஸ்டாவும் இருக்கும்.
எப்பவுமே வீட்ல மதியம் மீன் குழம்பு வைக்கும் போது அதிலிருந்து கொஞ்சமா மீன் குழம்பும் ஒரு துண்டு மீனும் எடுத்து இந்த மாதிரி சூப்பரான ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். வெறும் ஆம்லெட் சாப்பிடுறதுக்கு பதிலா இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா முட்டை விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலர் முட்டை சாப்பிடுறதுக்கு ரொம்ப விளையாடும் பிடிப்பாங்க ஆனா குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கிறது ரொம்ப நல்லது அதனால அவங்க சாப்பிட மாட்டேனு அடம் பிடிச்சா இந்த மாதிரி டேஸ்ட்டா ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க.
இத வச்சு நம்ம மீன் தோசை கூட ஊத்தலாம். கறி தோசை கேள்விப்பட்டிருப்போம் அதே மாதிரி மீன் தோசையும் கூட ட்ரை பண்ணி பார்க்கலாம். ஆனா முதலில் இந்த மீன் ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுக்கு ரெண்டு முட்டை இருந்தா போதும் மூணு பேரு இந்த ஆம்லெட்டை ஷேர் பண்ணி சாப்பிடலாம். அவ்ளோ சூப்பரா இருக்கும். சுவையான இந்த மாதிரியான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்கவங்க கூட செஞ்சு உட்கார்ந்து சாப்பிட்டு பாருங்க. மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கும் ஜாலியாகவும் இருக்கும். இந்த டேஸ்டான ருசியான மீன் ரெசிபியை கண்டிப்பா செஞ்சு பாருங்க. உடம்புக்கும் ரொம்ப ரொம்ப நல்லது. இப்ப வாங்க இந்த ருசியான மீன் ஆம்லெட் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
மீன் ஆம்லேட் | Fish Omelette Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 வேகவைத்த மீன் துண்டு
- 1 கரண்டி மீன் குழம்பு
- 2 முட்டை
- 1 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் உப்பு மீன் குழம்பு வேக வைத்த மீனை சிறு துண்டுகளாக தூளாக்கி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பிறகு அதனை ஒரு தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து ஊற்றிக் கொள்ளவும்.
- மிளகுத்தூள் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான மீன் ஆம்லெட் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வித்தியாசமான இந்த மீன் பொடிமாஸ் ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!